அட, ‘கண்மணி’ சீரியல் நடிகைக்கு இப்படியொரு திறமையா ? பதக்கத்துடன் அவர் வெளியிட்ட புகைப்படம்.

0
324
- Advertisement -

பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்களும், நிகழ்ச்சிகளும் திகழ்கிறது. சமீபகாலமாக இல்லத்தரசிகளுக்கு மட்டுமில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்க்க விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக சீரியல்கள் உள்ளது. இதனால் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஐரா அகர்வால். தற்போது இவர் சின்னத்திரையில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டு வருகிறார். இவர் சென்னையை சேர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு நடந்த Miss South India fashion pageant என்ற போட்டியில் ஐரா அகர்வால் பங்கேற்று வெற்றி பெற்றார்.

-விளம்பரம்-

இதனை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தெலுங்கில் இவர் வாடு வீடு கல்பனா என்ற படம் மூலம் 2016ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு தமிழில் ஐரா அகர்வால் அறிமுகமானார். மேலும், இவர் காட்டு பய சார் இந்த காளி, தாயம் உள்ளிட்ட சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இருந்தாலும் இவருக்கு வெள்ளித்திரையில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். சன் டிவியின் கங்கா சீரியலில் மகிமா என்ற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் ஐரா.

- Advertisement -

ஐரா அகர்வாலின் திரைப்பயணம்:

அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் வானதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார் ஐரா. பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் ஷிவானி நாராயணன் நடித்து விலகிய மீனாட்சி கதாபாத்திரத்தில் ஐரா அகர்வால் ஹீரோயினியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் ஒரு தனி இடம் கிடைத்தது. ஆனால், கொரோனா காலகட்டத்தில் இந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தற்போது ஐரா நடிக்கும் சீரியல்:

இதனால் சில மாதங்கள் இவர் சீரியலில் நடிக்காமல் இருந்தார். பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா மகள் சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் ஐரா நடித்திருந்தார். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பித்திருக்கும் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என சீரியலிலும் ஐரா நடித்து வருகிறார். இப்படி இவர் சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் மாடலிங், விளம்பரம் என பிற துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் குறித்த ஒரு ஸ்பெசலான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

நடிகை ஐரா செய்த சாதனை:

அது என்னவென்றால், இவர் விளையாட்டு துறையிலும் வல்லவராம். அதாவது இவர் குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். மேலும், இவர் சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து வருகிறார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடந்த சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். இந்த போட்டிகளில் 20 பிரிவுகள் கொண்ட விளையாட்டுகளில், அமெரிக்கா, ரஷ்யா உட்பட சுமார் 15 நாடுகளில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன் குத்துச்சண்டையின் 48 கிலோ கிராம் லைட் வெயிட் பிரிவில் அகர்வால் கலந்து கொண்டார்.

நடிகை ஐராவின் நீண்ட கால கனவு:

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அகர்வால் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார். இது குறித்து கூட ஐரா பேட்டி ஒன்றில் பாக்ஸிங் அனுபவங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர், பாக்ஸிங் எனது வாழ்க்கை, நடிப்பு எனது காதல். இரண்டும் இரு கண்கள் மாதிரி என்று கூறியிருந்தார். தினந்தோறும் காலை 4 மணிக்கு எழுந்து 7 மணி வரை இடைவிடாது பாக்ஸிங் பயிற்சி எடுத்துக் கொள்வாராம். அதை முடித்து விட்டு தான் சூட்டிங்கிற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ஐரா. அதுமட்டும் இல்லாமல் இவர் பாக்ஸிங் சம்பியன்ஷிப்ஸ் ஜெயிக்க வேண்டும் என்பது தான் நீண்ட கால கனவு, ஆசை என்ற தகவலையும் அவர் பகிர்ந்திருந்தார்.

வைரலாகும் ஐராவின் வீடியோ:

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோ என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். இந்த நிலையில் ஐரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்சிங் பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த வீடியோ புகைப்படம் எல்லாம் சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் சின்னத்திரை நடிகை ஐராவுக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா! என்று பலரும் பார்த்து பாராட்டி வருகிறார்கள்.

Advertisement