இதனால் தான் முதல் கணவரை பிரிந்தேன், இரண்டாம் திருமணம் செய்த லாரன்ஸ் பட நடிகையின் பகீர் தகவல்.

0
612
Anuprabhakar
- Advertisement -

கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனு பிரபாகர். கடந்த 1990ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான “சபால சென்னிகராய” என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். அதற்கு பிறகு சில ஆங்கில படங்களிலும், கன்னட படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான “ஹ்ருதயா ஹ்ருதயா” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக்கினார். இப்படி பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் அனு பிரபாகர்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து பல படங்களில் இவருக்கு வாய்ப்புகள் குவியத்தொடங்கியது குறிப்பாக தமிழ் மொழில் லாரன்ஸ் நடித்த “அற்புதம்” என்ற படத்திலும், அன்னை காளிகாம்பாள், மஜா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் குறைவான படங்களே நடித்திருந்தாலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் வெவ்வேறு மொழில்களில் நடித்து அசத்தி வருகிறார்.

- Advertisement -

திருமண வழ்க்கை :

இந்நிலையில் நடிகை அனு பிரபாகர் கடந்த 2002ஆம் ஆண்டு பிரபல கன்னட நடிகை ஜெயந்தியின் மகன் கிஷ்ணகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 12 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்த பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு கிருஷ்ண குமாரை விவாகரத்து செய்து விட்டார். அதற்கு பிறகு 2016ஆம் ஆண்டு ராகு முகர்ஜி என்ற கன்னட நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நந்தனா என்ற மகள் இருக்கிறார்.

விவாகரத்திற்கான காரணம் :

இப்படியொரு நிலையில் தான் பல காலங்களாக முதல் கணவர் விவாகரத்திற்கான காரணத்தை கூறாமல் இருந்த நடிகை அனு பிரபாகரன் சமீபத்தில் கன்னட ஊடகத்திற்க்கு கொடுத்திருந்த பேட்டியில் தான் ஏன் விவாகரத்து செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார். அவர் கூறியதாவது “கன்னட நடிகை ஜெயந்தியின் மகனை முதல் திருமணம் செய்து கொண்ட போது தொடக்கத்தில் நன்றாகத்தான் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் திருமணமாகி சில காலங்களுக்கு பிறகும் கூட என்னை தொடர்ந்து படங்களில் நடிக்க வற்புறுத்தினார்கள்.

-விளம்பரம்-

எனக்கு விருப்பமில்லை :

அதோடு தொடக்கத்தில் கட்டுக்கோப்பான உடைகளை அணியச்சொன்ன ஜெயந்தி பிறகு மிகவும் மார்டனான உடைகளை அணிய வேண்டும் என்று வற்புறுத்தினார். இதனால் என்னுடைய கணவருக்கும் எனக்கும் இடையே இரண்டாவதாக ஒரு நபர் வருவதை நான் விரும்பவில்லை. அது எனக்கு மனவருத்தத்தை கொடுத்தது. என்னை பொறுத்த வரையில் வழ்க்கை என்பது ஒரு முறை தான் எனவே அதனை மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.

மனதில் வ்ருத்துடன் வாழக்கூடாது. உங்களுக்கு அப்படி மகிழ்ச்சி கிடைக்கவில்லை என்றால் அதற்கு தேவையான செயல்களை நீங்கள் தான் செய்ய வேண்டும். அதனால் தான் முதல் கணவரை நான் விவாகரத்து செய்து விட்டேன் என்று தெரிவித்தார். இந்நிலையில் நடிகை அனு பிரபாகரன் தன்னுடைய முதல் திருமணம் குறித்து பேசியுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement