தமிழ் சினிமா உலகில் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகைகளில் சோனியா அகர்வாலும் ஒருவர். நடிகை சோனியா அகர்வால் சண்டிகாரை சேர்த்தவர். ஆரம்பத்தில் மாடலிங்கில் கொடிகட்ட பறந்த இவரை இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்தார். இந்த படத்திற்கு பின்னர் இவர் கோவில்,மதுர, ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டு பயலே உள்ளிட்ட பல ஹிட்டான படங்களில் நடித்து உள்ளார்.
பின் நடிகை சோனியா அகர்வால் தமிழ் மலையாளம் கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சோனியா அகர்வால் தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவதூறு செய்திகளை பரப்பினால் கண்டிப்பாக வழக்கு போடுவேன் என்று மீடியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று பெங்களூரில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கன்னட நடிகை சோனியா அகர்வால் வீட்டில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அந்த சோதனையில் 40 கிராம் கஞ்சா அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றி உள்ளனர்.
இதையும் பாருங்க : மங்காத்தா படத்தில் வரும் அஜித்தின் செயினுக்கும் படத்தின் கதைக்கும் இப்படி ஒரு தொடர்பா ? காஸ்டுயூம் டிசைனர் சொன்ன ரகசியம்.
இதனால் கன்னட நடிகை சோனியா அகர்வாலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த செய்தியை வெளியிட்ட சில மீடியாக்கள் கன்னட நடிகையின் புகைப்படத்திற்கு பதிலாக தமிழ் நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளனர். அதோடு தமிழ் நடிகையான சோனியா அகர்வாலின் வீட்டில் தான் சோதனை நடைபெற்றதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த சோனியா அவர்கள் கோபமடைந்து தன்னுடைய கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது, எதையும் தீர விசாரிக்காமல் அவசரமாக எந்த ஒரு குற்றச்சாட்டையும் பொய்யாக ஒருவர் மீது சுமத்தாதீர்கள். நான் தற்போது கேரளாவில் புதிய படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறேன். இது சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனம் மீதும், பத்திரிகையாளரும் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பேன். இன்று காலை முதலே தொடர்ச்சியான போன் அழைப்புகளும், செய்திகளும் வந்துகொண்டே இருக்கின்றன. இது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிகுந்த வேதனையும் அவமானத்தையும் தந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.