4 பக்க கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய இளம் சீரியல் நடிகை – பாவம், இப்படி ஒரு பிரச்சனையா ?

0
2563
soujanya
- Advertisement -

சமீபகாலமாகவே சினிமா துறையில் தற்கொலைகள் தொடர்கதையாக நடந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் தற்போது கன்னட சின்னத்துரை நடிகை சௌஜன்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கன்னட தொலைக்காட்சி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சௌஜன்யா. இவர் கன்னட மொழியில் சில படங்களிலும் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-


இந்நிலையில் பெங்களூருக்கு அருகே உள்ள கும்பல்கோடு என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நடிகை சௌஜன்யா இன்று காலையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலிசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து தான் நடிகை சௌஜன்யா உடலை மீட்டனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

விசாரணையின் போது நடிகை சௌஜன்யா வீட்டில் இருந்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதப்பட்ட நான்கு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் நடிகை சௌஜன்யா கூறி இருப்பது, எனக்கு உடல்நிலை குறைவாலும், சினிமா துறையில் தற்போது இருக்கும் சூழல் காரணமாக நான் நிம்மதியற்று இருக்கிறேன். கடந்த பல நாட்களாகவே நான் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டு உள்ளேன். அதனால் தான் நான் இந்த முடிவை எடுத்தேன் தவிர வேறு எந்த காரணமும் இல்லை. என்னுடைய தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை.

Actress Soujanya dies by suicide - INDIA - GENERAL | Kerala Kaumudi Online

அதோடு என்னை மன்னித்து விடுங்கள் என்று பெற்றோரிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். மேலும், அந்த கடிதத்தில் செப்டம்பர் 27, 28, 30 ஆகிய மூன்று தேதிகள் எழுதப்பட்டு இருந்தது. இதிலிருந்து நடிகை சௌஜன்யா மூன்று நாட்களுக்கு முன்பே தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்ததாக போலீசார் கூறி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் போலீசார் இதுகுறித்து நடிகை சௌஜன்யாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் தற்கொலை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் கூட ஜெயஸ்ரீ ராமையா என்ற நடிகை தற்கொலை செய்து கொண்டார். இவரும் இதேபோல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement