மனுஷன் திருக்குறளையும் விட்டு வைக்கல – எட்டு திருக்குறளை ஒரே பாடலில் வைத்த கண்ணதாசன்.

0
1382
Kannadasan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான கவிஞராகவும், பாடலாசிரியராகவும் இருந்தவர் கண்ணதாசன். இவர் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் என எழுதி கண்ணதாசன் பல நாள்இதழ்களின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். மேலும், தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் கண்ணதாசன். இவர் சாகித்திய அகாதமி விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். பல காலமாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செய்து வந்த கண்ணதாசன் 1981ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் தன்னுடைய 54 வயதில் காலமானார்.

-விளம்பரம்-

இவர் மறந்தாலும் பாடல்களின் மூலம் இன்றும் அவர் ரசிகர்களின் மனதில் நீங்காது இருந்து வருகிறது. உதாரணமாக ஒரு பாடலில் திருக்குறளில் உள்ள எட்டு குறல்களை கண்ணதாசன் தன்னுடைய பாடலில் வைத்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடியுமாம், ஆம் கடந்த 1964ஆம் ஆண்டு வெளியான ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடிகர் திலகம் திவாஜி கணேஷ் நடிப்பிலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் வெளியான “ஆறு மனனே ஆறு” பாடலில் தான் அந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார் கவிஞர் கண்ணதாசன்.

- Advertisement -

அந்த பாடலில் முதல் வரியிலேயே “ஆறு மனமே ஆறு” என்று வார்த்தைகளில் விளையாடி இருக்கிறார் கண்ணதாசன். ஆறு என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அதை பயன்படுத்தி கண்ணதாசன் “ஆறு மனமே” என்பதை கொதிக்கின்ற மனமே கொஞ்ச நீ ஆறு என்றிருக்கிறார் அதோடு ” தெய்வத்தின் கட்டளை ஆறு” என்பதில் மனிதனாக வாழ்வதற்கு தெய்வம் வகுத்த கட்டளைகள் ஆறு இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

1. பின்னர் முதல் சரணத்தில் “ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி” என்றது திருக்குறளில்

-விளம்பரம்-

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

2. “இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி” என்ற வரியில்

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

3. “உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் ” என்ற வரியில்

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

4. “நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணக்கும்” என்ற வரியில்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

5. “ஆசை கோவம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்” என்ற வரியில்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

என்றும் கூறியுள்ள கண்ணதாசன் மேலும் வரும் “அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்” என்ற வரியில்

6. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

7. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

8. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

என 8 குறலில் வரும் பொருளை ஒரு பாடலில் அமைத்தது கடந்த 1964ஆம் ஆண்டு வெளியான இப்பாடல் அன்று பெரிய அளவு வெற்றி பெற்று இன்றளவும் மக்கள் மனதில் நீகிக்காது இருந்து வருகிறது என்றால் கண்ணதாசனயே சாரும். மேலும் இவர் இறப்பிற்கு முன்னர் எழுதிய பாடல் “கண்ணையே கலை மானே” என்பது குறிப்பிடதக்கது.

Advertisement