தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான கவிஞராகவும், பாடலாசிரியராகவும் இருந்தவர் கண்ணதாசன். இவர் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் என மேற்பட்ட இயற்றி இருக்கிறார். இவர் பல நாள்இதழ்களின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். மேலும், தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் கண்ணதாசன். இவர் சாகித்திய அகாதமி விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

பல காலமாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செய்து வந்த கண்ணதாசன் 1981ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் தன்னுடைய 54 வயதில் காலமானார். இவர் மறந்தாலும் அவரின் பாடல்களின் மூலம் இன்றும் அவர் ரசிகர்களின் மனதில் வாழ்ந்துதான் வருகிறார். இந்த நிலையில் கண்ணதாசனின் மகனான அண்ணாதுரை ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் தன்னுடைய தந்தையான கண்ணதாசனை பற்றி பல சுவாரசியமான நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

Advertisement

இதையும் பாருங்க : பாழயடைந்த வீடு, மூடப்பட்ட கதவு, ஆன்லைனில் உணவு – கொடிகட்டி பறந்த கனகாவின் பரிதாப நிலை.

அவர் கூறியதாவது `அப்பா ஆரம்ப நாட்களில் இரவில் மட்டுமே மது அருந்தி வந்து பின்னாளில் மத்திய வேளைகளில் அது 2 பெக் என்று ஆனது. அவர் மது அறுத்தும் நேரம் அவரின் சிந்தனை நேரமாகும். ஆனால் பாடல்கள் எழுதும் போது செருப்பு கூட அணிந்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு பாடலின் மீது பக்தி இருந்தது. அவர் மது அருந்திவிட்டு பாடல்களை எழுதுவார் என்பதெல்லாம் அரசியல் லாபத்திற்காக மற்றவர்கள் சொன்ன கட்டுக்கதை.

Advertisement

அப்பாவிற்கு அப்போதே 16 லட்சம் கடன் பிரச்சனை இருந்தது. எங்களிடம் பேசும் போது கூட படம் எடுக்காதீர்கள், அபப்டி எடுத்தாலும் கூட பார்ட்னர்ஷிப் வேண்டாம், அதனை அப்படியே எடுத்தாலும் காப்புரிமையை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று கூறுவார். கடன் பிரச்சனை ஒருமுறை முற்றவே வீட்டை ஜப்தி செய்ய டாம் டாம் வந்தனர். அப்போது அப்பா வந்து பணத்தை கட்டி பிரச்னையை முடித்தார். அப்போது அவர் எழுதிய பாடல்தான் “சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்” என்ற பாடல். ஆனால் அப்பா எங்களை கடனாளியாக்கி இறக்கவில்லை, அவரின் புத்தகங்கள் மூலம் இன்றும் எங்களுக்கு வருடம் 15 லட்சம் வருகிறது.

Advertisement

மற்றோரு முறை அப்பா ரயில் பயணத்தின் போது காலையில் ஒரு கோவில் ஒன்றில் விளக்கும் அதில் மணி ஒன்றும் தெரிந்தது அப்போது எழுதிய பாடல்தான் “ஆலயமணியின் ஓசை நான் கேட்டேன்” என்ற பாடல். பின்னர் அப்பாவின் பிரியமான இவிகேஎஸ் தோல்வியடைந்த போது எழுதிய பாடல் தான் “யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே” என்ற பாடல். அப்பா ஒரு அசைவ பிரியர் இருந்தாலும் அதனை அளவோடுதான் உண்பார்.

மேலும் அப்பா மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது இவிகேஎஸ் சம்பத் முஸ்தஃபா காமல் பாஷா என்று துருக்கி புரட்சியார் பற்றி பேசி கொண்டிருந்தார். அதற்கு பிறகு அப்பாவிற்கு ஆன் குழந்தை பிறக்க அவருக்கு முஸ்தஃபா காமல் பாஷா என்ற பெயரையும், அண்ணா மீது கொண்ட அன்பினால் என்னக்கு அண்ணாதுரை என்று பெயர் சூட்டினார். ஆனால் என்னை துரை என்றுதான் அழைப்பர். அப்போது அண்ணாவிற்க்காக எழுதிய பாடல்தான் “நலந்தானா நலந்தானா ” என்று கவிஞர் கண்ணதாசன் பற்றிய பல சுவாரசியமான நிகழ்வுகளை நம்முடன் பகிந்து கொண்டார் அவரின் மகன் அண்ணாதுரை.

Advertisement