நன்றாக சென்று கொண்டு இருந்த ‘கண்ணான கண்ணே’ சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை.

0
4787
kannana Kanne
- Advertisement -

சமீபகாலமாகவே சின்னத்திரையில் நடிக்கும் பல நடிகர்கள் காரணம் என்னவென்றே தெரியாமல்
சீரியலில் இருந்து விலகி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வரவேற்பை கொண்டிருக்கும் சீரியலில் இருந்து நடிகை ஒருவர் விலகியுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் கண்ணான கண்ணே தொடரும் ஒன்று .இந்த சீரியல் சமீபத்தில் தான் வெளிவந்தது. இந்த சீரியல் வெளிவந்த சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் கதாநாயகனாக ராகுல் ரவி நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாகவே சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடரில் நடித்து இருந்தார்.

- Advertisement -

பிறகு சாக்லேட் என்ற தொடரிலும் நடித்து இருந்தார். மேலும், இந்த தொடரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்து வருகிறார். தந்தையின் பாசத்திற்காக ஏங்கும் மகளின் கதையை மையமாகக் கொண்ட கதை தான் கண்ணானே கண்ணே தொடர். இவர்களுடன் இந்த தொடரில் பிரித்திவிராஜ், நித்திய தாஸ், பிரீதி சஞ்சீவ், அக்ஷிதா உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

மேலும், இந்த தொடர் 200 எபிசோடுகளை தொடர்ந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் பிரியா. தற்போது இவர் இந்த சீரியல் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் ஏன் சீரியல் இருந்து விலகினார் என்று காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement