சன் டி.வி சீரியலில் அதிரடி திருப்பம் – முடிவுக்கு வரும் முக்கிய கேரக்டர். லீக்கான மாயான புகைப்படம்.

0
1418
kannanakanne
- Advertisement -

கண்ணானே கண்ணே சீரியலில் அதிர்ச்சியான டீவ்ஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர். சூட்டிங் ஸ்பாட் போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அந்த வகையில் மற்ற சேனல்களை விட சன் டிவியில் ஒளிபரப்பாகும் சேனல்களை எப்போதும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது.

-விளம்பரம்-

அதில் சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கண்ணான கண்ணே. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி பார்க்கும் தொடராக இருக்கிறது. அப்பா-மகள் இடையே பாச போராட்டத்தை மையமாக கொண்ட தொடர். தெலுங்கில் ‘பௌர்ணமி’ என்ற டைட்டிலில் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் தமிழில் ‘கண்ணான கண்ணே’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

கண்ணான கண்ணே சீரியல்:

இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2020 வெளிவந்தது. இந்த தொடரில் கதாநாயகனாக ராகுல் ரவி நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாகவே சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடரில் நடித்து இருந்தார். பின் இவர் சாக்லேட் என்ற தொடரிலும் நடித்து இருந்தார். மேலும், இந்த கண்ணான கண்ணே தொடரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சீரியலின் கதை:

இவர்களுடன் இந்த தொடரில் பிரித்திவிராஜ், பிரீத்தி சஞ்சீவ், அக்ஷிதா உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் பிரீத்தி சஞ்சீவ் மீண்டும் வாசுகி கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்து இருக்கிறார். தற்போது சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. சீரியலில் மீரா கர்ப்பமாக இருப்பது போலத்தான் கதை நகரும் என தெரிகிறது.

-விளம்பரம்-

அதிர்ச்சியான டீவ்ஸ்ட்:

இப்படி பரபரப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கும் தருணத்தில் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் வந்து இருக்கிறது. அதாவது, இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இறந்து விட்டதாக காட்டப்படுகிறது. அவரை எரிக்கும் காட்சியை எடுத்து இருக்கின்றனர். ஆனால், அவர் யார் என்ற தகவல் தெரியவில்லை. ஆணா? பெண்ணா? என்றும் தெரியவில்லை.

வைரலாகும் புகைப்படம்:

மேலும், இதற்க்கான காட்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் வெளியான தொடர்ந்து ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இனிவரும் எபிசோடில் கண்ணான கண்ணே டிஆர்பி ரேட்டிங்கில் ஏறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement