கண்ணான கண்ணே சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை – நாளை முதல் இந்த நடிகை தான். வெளியான புகைப்படம் இதோ.

0
1436
Kannanakanne
- Advertisement -

பொதுவாகவே சின்னத்திரையில் நடிக்கும் பல நடிகர்கள் காரணம் என்னவென்றே தெரியாமல் சீரியலில் இருந்து விலகுவார்கள். அதிலும் கொரோனா காலகட்டத்தில் இருந்து பல நடிகர், நடிகைகள் சீரியலில் இருந்து விலகி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சீரியலில் இருந்து நடிகை ஒருவர் தற்போது விலகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மற்ற சேனல்களை விட சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு எப்போதும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அதில் சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

தெலுங்கில் ‘பௌர்ணமி’ என்ற டைட்டிலில் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் தமிழில் ‘கண்ணான கண்ணே’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் கண்ணான கண்ணே தொடரும் ஒன்று .இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளிவந்தது. இந்த தொடரில் கதாநாயகனாக ராகுல் ரவி நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாகவே சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடரில் நடித்து இருந்தார். பிறகு சாக்லேட் என்ற தொடரிலும் நடித்து இருந்தார்.

- Advertisement -

கண்ணான கண்ணே சீரியல் நடிகர்கள்:

மேலும், இந்த தொடரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்து வருகிறார். தந்தையின் பாசத்திற்காக ஏங்கும் மகளின் கதையை மையமாக கொண்டது கண்ணானே கண்ணே. இவர்களுடன் இந்த தொடரில் பிரித்திவிராஜ், நித்திய தாஸ், பிரீதி சஞ்சீவ், அக்ஷிதா உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தொடரில் இருந்து நித்யா தாஸ் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொடரில் யமுனா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நித்யா தாஸ் . இந்த கதாபாத்திரத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவைப் பெற்றார்.

நடிகை நித்யா தாஸ் திரை பயணம்:

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நித்யா தாஸ். இவர் மலையாள திரைப்படங்களின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதனை தொடர்ந்து சினிமா, சீரியலில் நடித்து வருகிறார். தமிழில் ஷ்யாம் நடித்த ‘மனதோடு மழைக்காலம்’ என்ற படத்தின் மூலம் தான் கதநாயகியாக அறிமுகமானார். பின் தமிழில் ‘பொன் மேகலை’ போன்ற சில படங்களில் நடித்து இருந்தார்.
இவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வெற்றி பெறாததால் இவர் சின்னத்திரை நோக்கி பயணம் செய்து விட்டார்.

-விளம்பரம்-

கண்ணானே கண்ணே சீரியலில் இருந்து விலகும் நித்யா தாஸ்:

மேலும், இவர் சன் டிவியில் இதயம், பைரவி ஆகிய தொடர்களில் நடித்து தமிழ்நாட்டு இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் கண்ணானே கண்ணே சீரியலில் இருந்து விலகி இருப்பதாக சோசியல் மீடியாவில் கூறப்படுகிறது. இவர் ஏன் சீரியல் இருந்து விலகினார்? என்ற காரணம் இன்னும் தெரியவில்லை. இவருக்கு பதில் யார் நடிக்கப் போகிறார்கள் ? என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது நித்தியா தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை வினோதினி நடிக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகை வினோதினி சின்னத்திரைக்கு புதிதானவர் இல்லை. இவர் 90 காலகட்டங்களில் வெளியான படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

ரீ-என்ட்ரி கொடுக்கும் வினோதினி:

பின் சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றவுடன் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். நடிகை வினோதினி பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இதனால் சீரியலில் இருந்து கொஞ்ச காலம் விலகி இருந்தார். பின் குடும்பம், கணவர் பிசினஸ் என்று பல வேலைகளில் கவனம் செலுத்தி இருந்ததால் வினோதினி சீரியலில் நடிக்காமல் இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கிறேன் என்று பேட்டி கொடுத்திருந்தார். அதேபோல் தற்போது இவர் கண்ணான கண்ணே சீரியலில் யமுனா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement