‘நாங்க லவ் பண்றோம்’ சன் டிவி ஹீரோவுடன் காதலை அறிவித்த கண்ணே கலைமானே சீரியல் நடிகை.

0
458
- Advertisement -

கண்ணே கலைமானே சீரியல் நடிகை பவித்ரா தன்னுடைய காதலர் , திருமணம் குறித்து வெளிப்படையாக கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரையில் நடிக்கும் பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஜோடி ஸ்ரேயா– சித்து. கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

-விளம்பரம்-

அதே போல் மதன்– ரேஷ்மா, ஷபானா-ஆர்யன் போன்ற பல ஜோடிகள் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஜோடி அமல்ஜித் – பவித்ரா. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த அம்மன். இந்த தொடர் நல்ல வரவேற்பு பெற்று இருந்ததால் இரண்டு பாகம் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த தொடரில் ஜோடியாக அமல்ஜித் – பவித்ரா நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

அமல்ஜித்-பவித்ரா நடிக்கும் சீரியல்:

தற்போது நடிகை பவித்ரா அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே என்ற தொடரில் பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரும் மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்து இருக்கிறது. அதே போல் அமல்ஜித் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கும் சிங்கப் பெண்ணே தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான குறுகிய நாட்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அமல்ஜித்-பவித்ரா காதல்:

அது மட்டுமில்லாமல் இந்த சீரியல் ஒளிபரப்பான ஒரே மாதத்தில் டிஆர்பி யில் முன்னிலையில் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறது. மேலும், இந்த சீரியலில் அமல்ஜித்- அன்பு என்ற ரோலில் ஹீரோவாக நடிக்கிறார். மனிஷா மகேஷ்- ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அமல்ஜித்-பவித்ரா இருவரும் சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.

வைரலாகும் புகைப்படம்:

தற்போது இவர்களுடைய காதலையும் வெளிப்படையாக உறுதி செய்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களை காதலுக்கு இரு விட்டாரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இது தொடர்பாக இவர்கள் இருவரும் வெளிப்படையாக சமூகவலைத்தளங்களில் அறிவித்து இருக்கிறார்கள்.

ரசிகர்கள் வாழ்த்து:

பின் இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்கள். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி இருக்கிறார்கள். அதோடு உங்களுடைய திருமணம் எப்போது? என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

Advertisement