கண்ணெதிரே தோன்றினால் படத்தில் இடம்பெற்ற அஜித் – சிம்ரன் பட போஸ்டர் – இத எப்படி மிஸ் பண்ணாரு இயக்குனர்.

0
1184
simran
- Advertisement -

பொதுவாகவே சினிமா உலகில் வரும் படங்களில் ஏதாவது ஒரு மிஸ்டேக் படக்குழுவால் அறியாமல் வந்து விடும். அது சாதாரண படம் முதல் தொடங்கி பிரம்மாண்ட பெரிய படங்கள் வரை என எல்லா படங்களிலும் ஏதாவது ஒரு இடத்திலாவது ஒரு தவறுகள் நடக்கும். அந்த வகையில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் தவறுகள் நடந்து இருக்கிறது. அதிலும் சோசியல் மீடியா என்ற ஒன்று உருவான போதிலிருந்தே படங்களில் ஏதாவது ஒரு மிஸ்டேக் நடந்திருந்தால் அதை ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி விடுவார்கள்.

-விளம்பரம்-

‘கண்ணெதிரே தோன்றினாள்’ :

இப்படி ஒரு நிலையில் பிரசாந்த் படத்தில் வந்த ஒரு மிஸ்டேக் கை தற்போது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். அது என்ன படம் என்ன வென்றால் ‘கண்ணெதிரே தோன்றினாள்’. 1998 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் படம் கண்ணெதிரே தோன்றினாள். இந்த படத்தில் பிரசாந்த், சிம்ரன், ஸ்ரீவித்யா, விவேக், வையாபுரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற படம் :

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. மேலும், காலங்கள் கடந்தாலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் ரசிக்கப்பட்டு தான் வருகிறது. இந்த படத்தில் பிரசாந்த் தன்னுடைய நண்பனுடைய (கரண்) தங்கையான சிம்ரனை காதலிப்பார். பின் சிம்ரனும், பிரசாந்தும் காதலிப்பார்கள். ஆனால், தன் நண்பனுடைய தங்கையை காதலிப்பது தவறு என்று நினைத்து பிரசாந்த் விலகி செல்வார்.

அவள் வருவாளா படத்தின் போஸ்டர் :

இறுதியில் சிம்ரன் உயிருக்குப் போராடும் நிலைமையில் இவர்களுடைய காதலை புரிந்துகொண்டு கரண் சேர்த்து வைப்பார். இது முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்ட படம். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் பிரசாந்த், கரணை டைட்டானிக் படத்திற்கு போகலாம் என்று கூப்பிட்டு இருப்பார். அப்போது தியேட்டரில் டைட்டானிக் பட போஸ்டர் பக்கத்திலேயே அவள் வருவாளா படத்தின் போஸ்டர் இருக்கும்.

-விளம்பரம்-

இப்படி ஒரு தவறை எப்படி மிஸ் பண்ணாங்க :

அந்த போஸ்டரில் அஜித்துடன் சிம்ரன் இருப்பார். அதைபோல் கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் சிம்ரன், பிரசாந்துக்கு ஜோடியாகும்,கரணுக்கு தங்கையாகவும் நடித்து இருப்பார். இந்த இரண்டு படங்களும் ஒரே ஆண்டில் வெளியிடப்பட்டது. ஆனால், அவள் வருவாளா படம் முதலில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிம்ரனை வைத்து படத்தில் நடந்த மிஸ்டேக் காட்சியை குறித்து இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டும், புகைப்படத்தை பதிவிட்டும் வருகிறார்கள்.

இயக்குனர் ராஜ்கபூர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அவள் வருவாளா. இந்த படம் தெலுங்கில் வெளிவந்த பெள்ளி என்ற படத்தின் கதையை மையமாகக் கொண்டு தமிழில் உருவானது. இந்த படத்தில் அஜித் குமார், சிம்ரன், சுஜாதா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

Advertisement