யார் அந்த சொப்பன சுந்தரி.! 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக போகும் ரகசியம்.! ரசிகர்கள் குஷி.!

0
2405
Goundamani
- Advertisement -

வாழைப்பழ காமெடி என்றதும் நம் நினைவில் முதலில் வருவது ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் தான். கங்கை அமரன் இயக்கத்தில்உருவான ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. ராமராஜன், கனகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-
Image result for கரகாட்டக்காரன் 2

இந்த படத்தில் வரும் பாடல்களும், காமெடிகலும் ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாது. இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து காரகாட்டகாரன் படத்தின் இரண்டாம் பாகம் தயராக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பேசிய கங்கை அமரன், கரகாட்டக்காரன் படத்தில் நடித்த அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அனைத்தும் நல்லவிதமாக போய்க் கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : இப்படி கூட பிறந்தநாள் கொண்டாடலாமா.! காசு இருந்தா என்ன வேணுனாலும் பண்ணலாம் போல.! 

- Advertisement -

கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடிக்கு பின்னர் பலராலும் பேசப்பட்டது சொப்பன சுந்தரி தான். இதை வைத்து பாட்டெல்லாம் கூட வெளியாகி இருந்தது. இந்த நிலையில் யார் அந்த சொப்பன சுந்தரி என்று கரகாட்டக்காரன் 2 படத்தில் கங்கையமரன் சொல்லப்போகிறாராம். மேலும், சொப்பன சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் ஒரு முக்கிய நடிகையும் நடிக்க இருக்கிறாராம்.

Related image

மேலும், இந்த படத்தில் செந்தில் மற்றும் கௌண்டமணி மீண்டும் இணைந்து நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், கடந்த சில காலமாக கௌண்டமணி உடல் நல குறைவால் இருந்து வருவதால் கரகாட்டக்காரன் 2 படத்தில் கௌண்டமணி நடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக ராமராஜன் நடிக்கவில்லை என்பது தான் சோகமான விடயம். ‘கரகாட்டக்காரன் 2 பற்றி எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். கங்கை அமரன் கூட கடந்த வரும் என்னிடம் பேசினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஏனெனில், ஒரு முறை கரகத்தை எடுத்தாச்சு. வச்சாச்சு. இனிமேல் அதில் கை வைத்தால் தேன் கூட்டில் கை வைத்தது போல் ஆகிவிடும். எனவே, அதில் பங்கெடுக்க விரும்பவில்லை என்று ராமராஜன் கூறியுள்ளார்.

Advertisement