லால் நடித்த சர்ச்சை விளம்பரம் – எதிர்ந்த எதிர்ப்புகளுக்கு அவர் கொடுத்த விளக்கம் இதோ. இவருக்கா இந்த நிலைமை.

0
850
lal
- Advertisement -

ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததற்கு வருந்துகிறேன் என்று நடிகர் லால் அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாள சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் லால். இவர் பெயர் லால் என்கிற எம்பி மைக்கேல். இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதற்குப் பின் தான் தமிழில் பல படங்களில் நடித்தார்.இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதை தொடர்ந்து இவர் தமிழில் சண்டக்கோழி, ஓரம் போ, காளை, குட்டி புலி, மருதமலை, ஆழ்வார், சீமராஜா, தோரணை என்று பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிகர், இயக்குனர், வசன எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட வெளியீட்டாளர் ஆவார். அதோடு இவர் அதிகம் மலையாளம் திரைப்படங்களில் தான் நடித்து இருக்கிறார். ஒரு சில ஆங்கில திரைப்படத்திலும் லால் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார்.

- Advertisement -

லால் நடித்த படங்கள்:

அதுவும் தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தில் லால் நல்லவராக நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. கடைசியாக இவர் தனுஷின் கர்ணன் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், கர்ணன் வெளியான சில வாரங்களுக்கு முன்னர் தான் கார்த்தியின் சுல்தான் படம் கூட வெளியானது. அந்த படத்திலும் நடிகர் லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

கர்ணன் படம்:

ஆனால், அந்த படத்தை விட கர்ணன் படத்தில் தான் லாலின் நடிப்பு மிகவும் பாராட்டுக்குரிய வகையில் இருந்தது. இந்த படத்தில் ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டு குறித்து லால் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாட்டு பலருடைய வாழ்க்கையை சூறையாடிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-

ஆன்லைன் ரம்மி விளையாட்டு:

இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்து தற்கொலை .செய்திருக்கின்றனர் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. இந்தநிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்த நடிகர் லால், நடிகை தமன்னா உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரம்மி விளையாட்டு குறித்து நடிகர் லால் கூறி இருப்பது, பண நெருக்கடியால் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்து விட்டேன். கொரோனா ஊரடங்கின் போது நிறைய பண கஷ்டம் ஏற்பட்டது.

ரம்மி விளையாட்டு குறித்து லால் சொன்னது:

அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிக்க அழைப்பு வந்தது. நான் நிறைய யோசித்தேன். அதில் நடிப்பதற்கு முன்னால் அரசு அனுமதி வழங்கி இருக்கிறது என்று நினைத்தேன். அப்போது இந்த விளம்பரம் மூலம் பெரிய பிரச்சனை வருமோ என்றும், ரம்மி விளையாட்டு பலரை தற்கொலைக்கு கொண்டு செல்லும் என்றோ நான் நினைக்கவில்லை. ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இனிமேல் இது போன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement