குட்டி மாரி வந்துட்டார் – கர்ணன் இயக்குனர் மாரி செல்வராஜ் மனைவி பதிவிட்ட புகைப்படம்.

0
1933
- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு போன்ற பல்வேறு பரிட்சயமான நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ணன்’ படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்த படத்தின் இருந்து வெளியான கண்டா வரச்சொல்லுங்க பாடல் யூடுயுபில் எக்கச்சக்க லக்ஸ்களையும் வியூஸ்களையும் குவித்து வருகிறது. இயக்குனர் மாறி செல்வராஜ் 2006 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் வந்தார். அதன் பின்னர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

- Advertisement -

ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் கூட ஒரு சிறு காட்சியில் நடித்து இருப்பார் மாரி செல்வராஜ். இப்படி ஒரு நிலையில் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார். 36 வாரங்கள் கிட்டத்தட்ட 8.5 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் திவ்யாவிற்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றது. அந்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் திவ்யா. இதனால் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இப்படி நிலையில் சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள திவ்யா, மாரி செல்வராஜுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தோவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ நாவலில் வருகிற கதாநாயகியின் பெயர், நாஸ்தென்கா. மாரி செல்வராஜின் மகளுக்கு இந்தப் பெயரைத் தான் வைத்துள்ளார். இந்த பெயரை தேர்ந்தெடுத்தது வேறு யாரும் இல்லை மாரி செல்வராஜின் சினிமா உலக குருவான தேர்ந்தெடுத்தது, இயக்குநர் ராம் தான்.

-விளம்பரம்-

Advertisement