மேடையில் பேசிக்கொண்டிருந்த மாரி செல்வராஜின் செல் போனில் ஒலித்த விஜய் படத்தின் ரிங் டோன் – வைரல் வீடியோ.

0
24888
mari
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். அதிலும் இவருடன் படம் செய்ய பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் காத்துகொண்டு இருக்கின்றனர். அதிலும் ஒரு சில இயக்குனர்கள் விஜய்யை வைத்து படம் எடுக்க மிகவும் ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இயக்குனர் மாரி செல்வராஜ், தான் ஒரு எந்த அளவிற்கு விஜய் ரசிகர் என்பதை பேட்டி ஒன்றில் கூறி இருந்தது பெரும் வைரலாக பேசப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு போன்ற பல்வேறு பரிட்சயமான நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ணன்’ படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாறி செல்வராஜ், தான் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்றும் தியேட்டருக்கு சென்று விஜய் படம் மட்டும் தான் பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், அடங்கா தமிழன் விஜய் ரசிகர் மன்றதின் தலைவராக இருந்ததாகவும் கூறி இருந்தார் மாறி செல்வராஜ். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, பல விஜய் ரசிகர்களும் மாரி செல்வராஜ் விஜய்யை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று இருந்தார். அப்போது மேடையில் மாரி செல்வராஜ் பேசிக்கொண்டு இருக்கும் போது அவரது செல் போனில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் ‘master the blaster’ ரிங் டோன் ஒலித்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த அளவிற்கு விஜய்யின் ரசிகரா என்று பலரும் வியந்து போய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement