எப்போவ், கர்ணா – ஊர் மக்களாக நடித்தவர்களுக்கு கூட உயிரை கொடுத்து சொல்லி கொடுத்துள்ள மாரி செல்வராஜ். வீடியோ இதோ.

0
49793
karnan
- Advertisement -

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.

இதையும் பாருங்க : தெறி படத்தில் சமந்தா கட்டி வந்த இதே புடவையில் பவித்ரா நடத்திய போட்டோ ஷூட் – அவங்க தங்கச்சி மாதிரி இருகாங்களே.

- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்திருக்கும் இப்படம், தனுஷின் கரியரில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற படம் எனும் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. கர்ணன் படத்தை பார்த்துவிட்டு பல்வேறு பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தில் தனுஷை அடுத்து எமராஜாவாக நடித்த லால், கண்ணபிரானாக நடித்த நட்டி ஆகியோரின் நடிப்பும் பெரிதும் பாரட்டப்பட்டது. அதே போல இந்த படத்தில் கொடியன்குளம் ஊர் மக்களாக நடித்த அனைவரின் நடிப்பும் பலரால் பாரட்டப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ஊர் மக்களாக நடித்த துணை நடிகர்களுக்கு மாரி செல்வராஜ் எப்படி வசனத்தை சொல்லிக்கொடுத்தார் என்பதற்கு இந்த படத்தின் டப்பிங் வீடியோ வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement