கர்ணன் படத்தை தொடர்ந்து தமிழில் மாஸ் ஹீரோவுக்கு ஜோடியான நடிகை ரஜிஷா விஜயன்.

0
1989
rajisha
- Advertisement -

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-88.jpg

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.

இதையும் பாருங்க : திருமதி செல்வம் சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகையா இப்படி எல்லாம் நடித்துள்ளார். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்தது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்து இருந்தார். ஆரம்ப காலத்தில் பல்வேறு மலையாள தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்த இவர் அதன் பின்னர் 2016 ஆண்டு தான் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

karthi-next-film-titled-as-sardar

இதுவரை இவர் மலையாளத்தில் 7 திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் கர்ணன் படத்தை தொடர்ந்து தற்போது கார்த்தியின் ‘சர்தார்’ படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் தான் இந்த படத்தை இயக்குகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ‘சிறுத்தை’ படத்துக்குப் பிறகு இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

Advertisement