‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.
இதையும் பாருங்க : ‘வாழ்க்கை அழகானது’ – புதிய காதலருடன் நெருக்கமாக புகைப்படங்களை வெளியிட்ட ஓவியா.
கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் தலை இல்லாத புத்தர் சிலை, கழுதை, முகமூடி அணிந்த பெண் என்று பல குறியீடுகளை வைத்து இருந்தார் மாரி செல்வராஜ்.
அதில், கர்ணன் தங்கையாக வரும் சிறுமி தான் இறந்த பின்னரும் முகமூடி போட்டுகொண்டு படம் முழுதும் வருவார். ஆனால் இந்த பொம்மை தலை அணிந்த பெண் எதற்காக அடிக்கடி வந்தார் என்பது பலருக்கும் புரியாமல் இருந்தது. வீட்டில் திருமணம் ஆவதற்கு முன்பு பெண் இருந்து விட்டால். அந்தப் பெண்ணை கன்னி அம்மன் ஆக அந்த குடும்பம் தலைமுறை தலைமுறையாக வழிபடுவார்கள். எந்த மாவட்டத்தில் எல்லாம் இந்த மாதிரியான வழிபாடு இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் அந்த வழிபாடு இன்னமும் தொடர்கிறது என்கிறார்கள். இப்படத்தில் காட்டு பேச்சியாக நடித்த சிறுமியின் பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.