கெட்ட வார்த்தை வேணாம் – கர்ணன் படத்தால் தன்னை திட்டி தீர்ப்பவர்கள் பற்றி நட்டி போட்ட பதிவு.

0
2134
natti
- Advertisement -

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 9 வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ்.

-விளம்பரம்-

இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்துஉருவாகி இருந்தது. ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டி இருந்தார்.

இதையும் பாருங்க : அச்சமில்ல ஓடுன்னு இங்க தம் அடிச்சிட்டு இருக்க – ஹமாம் சோப் ஆண்டியை பங்கம் செய்யும் மீம் கிரியேட்டர்கள்.

- Advertisement -

அதே போல இந்த படத்தில் கண்ணபிரான் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாகி மிரட்டி இருந்தார் நட்டி. இந்த படத்தில் கொடூரமான நடிப்பை வெளிப்படுத்திய நட்டிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தாலும். இந்த படத்திற்கு பின்னர் இவரை பலரும் திட்டி தீர்த்தனர். இதுகுறித்து ட்வீட் ஒன்றை போட்டிருந்த நட்டி, என்ன திட்டாதீங்க எப்போவ், ஆத்தோவ், அண்ணோவ், கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன். போன் மெசேஜ்ல திட்டாதீங்கப்பா. முடியிலப்பா, அது வெறும் நடிப்புப்பா, ரசிகர்களுக்கு எனது நன்றி என்று பதிவிட்டு இருந்தார்.

ஆனாலும், இவரை பலரும் திட்டி தீர்த்து தான் வருகிறார்களாம். இதனால் கொஞ்சம் கடுப்பான நட்டி மீண்டும் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், ஒரு படத்துல நடிக்கிறோம்…அதை விமர்சிக்க பலருக்கு உரிமை உண்டு.. ஆனா original id la வாங்க … fake id la வராதீங்க.. யாருன்னே புரிஞ்சுக்க முடியல..ஜாஸ்தியா வேற comment பண்றீங்க கெட்ட வார்த்தை வேணாம்ங்க என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement