அச்சமில்ல ஓடுன்னு இங்க தம் அடிச்சிட்டு இருக்க – ஹமாம் சோப் ஆண்டியை பங்கம் செய்யும் மீம் கிரியேட்டர்கள்.

0
6026

நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் பல விளமபரங்களில் பல நடிகர் நடிகைகள் நடித்திருப்பதை பார்த்திருப்போம். அப்படி விளம்பரத்தில் பார்க்கும் ஒரு சில நடிகர் நடிகைகளைஅவர்களின் நிஜ வாழ்க்கையில் பார்க்கும் போது, அட இவர் அந்த விளம்பரத்தில் நடித்தவர் தானே என்று நாம் பல முறை கேட்டிருப்போம். அந்த வகையில் நாம் டிவியில் அடிக்கடி பார்க்கும் ஹமாம் சோப் விளம்பரத்தில் இவரை பல முறை பார்த்திருப்போம். சினிமாவில் கூட நமக்கு அம்மா எல்லாம் ஹமாம் சோப்பு விளமபரத்தில் வர அம்மா மாதிரி இருக்க மாற்றங்க என்ற வசனங்கள் கூட வந்திருக்கிறது.

அந்த அளவிற்கு ஹமாம் சோப் விளம்பரம் பார்வையாளர்கள் மத்தியில் பேமஸ். அதிலும் சமீப காலமாக ஹமாம் சோப் விளம்பரத்தில் இவர் தான் அம்மாவாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் புகைபிடிப்பது போல இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹமாம் சோப் விளம்பரத்தில் வந்த அம்மாவா இது என்று ஷாக்காகியுள்ளனர்.

இதையும் பாருங்க : என் நண்பர் அன்பில் மகேசுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்னன்னா -PSBB விவகாரத்தில் விஷால் ஆவேசம்.

- Advertisement -

அதிலும் மீம் கிரியேட்டர்கள் சும்மா இருப்பார்களா, இது ஹமாம் சோப் ஆன்டி இல்ல என்று மீம் போட்டு காலய்த்து வருகின்றனர். அதிலும் ஒரு மீமில் என்ன மம்மி இதெல்லாம் என்ன அச்சம் இல்ல ஓடுன்னு சொல்லிட்டு நீ இங்க தம் அடிச்சிட்டு இருக்க என்றல்லாம் மீம் போட்டு பங்கம் செய்து வருகின்றனர். இவரது உண்மையான பெயர் மேகா ராஜன். இவர் அமேசான், ஹமாம் உள்ளிட்ட பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

இவர் 2000-ல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியின் ஃபைனலிஸ்ட் ஆவர். ஆரம்பத்தில் இவர், மும்பையில ஜெட் ஏர்வேஸின் கேபின் க்ரூவில் பணியாற்றியவர். மேலும், இவர் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்துள்ளார். அதே போல கீதா கைலாசம் என்ற நாடகத்தையும் இயக்கி இருக்கிறார். இவருக்கு சீரியல்களில் நடிக்க கூட எக்கச்சக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், இவர் தான் சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம்.

-விளம்பரம்-
Advertisement