பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று படங்களில் நடித்த நடிகர் திடீர் மரணம் – இதான் காரணமாம்.

0
348
pooram
- Advertisement -

உடல்நலக்குறைவால் நடிகர் ராமு அரசு மருத்துவமனையில் காலமாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ராமு. இவர் இயக்குனர் சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த பூ என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படத்தில் கதாநாயகன் தங்கராசுவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், படத்தில் வெள்ளந்தியான கிராமத்து தந்தையாகவே திகழ்ந்தார். இதனை அடுத்து இவர் நீர்பரவை, வீரம், ஜில்லா,நெடுநல்வாடை போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார். அதிலும் தங்க மீன்கள் படத்தில் செல்லம்மாளின் தாத்தாவாக பாசமாகவும், கல்யாணசுந்தரத்தின் தந்தையாக கடுமையாகவும் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ராமு.

இதையும் பாருங்க : MGR மீது இருந்த பற்றால் அவரை போல பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகர், அட, இவர் முருகதாஸுக்கு இப்படி ஒரு நெருங்கிய உறவினாரம்.

- Advertisement -

குணச்சித்திர வேடங்களில் அசத்திய ராம் :

அதுமட்டுமில்லாமல் கதிர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்த பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி முதல்வர் வேடத்தில் ராமு நடித்து இருந்தார். அந்த படத்தில் அறையில் கதிருக்கு அறிவுரை கூறும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவருடைய வசனங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று இருந்தது. இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

திடீர் மரணம் :

இதனால் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார். பின் இவர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்த சூரரைப்போற்று படத்திலும் சூர்யாவின் தந்தையாக நடித்து இருந்தார். அதில் அவருடைய இறக்கும் காட்சி பலரையும் கண்கலங்க வைத்து இருந்தது. இந்த நிலையில் நடிகர் ராமு இறந்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அரசு மருத்துவமனையில் இறப்பு :

சமீபத்தில் நடிகர் ராமுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தும் சிகிச்சை பலனின்றி நடிகர் ராம் உயிரிழந்து விட்டார். இவருடைய இறப்பு ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபலங்கள் இரங்கல் :

அதோடு இந்த தகவலை இயக்குநர் லெனின் பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement