கடந்த சில தினங்களாக கமலின் மொழி சர்ச்சை தான் பூகம்பமாக வெடித்து கொண்டு இருக்கிறது. தற்போது கமல் நடித்து இருக்கும் படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். இந்த தக் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நடந்து இருந்தது. இந்த விழாவிற்கு தக் லைப் பட குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் வருகை தந்திருந்தார். அப்போது விழாவில் சிவராஜ் குமாரை பார்த்து கமல், உயிரே உறவே தமிழே.
https://www.youtube.com/watch?v=-xJCUFRZWIw
என் மகனாக, என் ரசிகனாக, உங்களின் பிரதிநிதியாக வந்திருக்கிறார். இந்த அன்புக்கு நான் எப்படி அடிபணியாமல் இருக்க முடியும்? சிவராஜ்குமார் மற்றொரு மாநிலத்தில் வாழும் என்னுடைய குடும்பம். அதனால் தான் உயிரே உறவே தமிழே என்று பேச தொடங்கினேன். உங்களுடைய பாசை தமிழில் இருந்து வந்தது. எனவே முதல் வரி உங்களையும் சேர்த்தது என்று கூறி இருந்தார். இப்படி கமலஹாசன் பேசியிருந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. காரணம், தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று அவர் கூறியிருப்பார். இதனால் கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் வெடித்திருக்கிறது.
தக் லைஃப் படம்:
கன்னட ரக்ஷனா வேதிகே உள்ளிட்ட தீவிர கன்னட இயக்கங்கள் கமலின் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து எச்சரிக்கை விட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் கன்னட அமைப்புகள் தக் லைப் படத்தினுடைய போஸ்டர்களையும் கிழித்து இருந்திருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக கன்னட ரக்ஷனா வேதிகே தலைவர், கன்னடா தமிழுக்கு பிறகு பிறந்ததாக கூறியிருக்கிறார். உங்களை நான் எச்சரிக்கிறேன். உங்களுக்கு கர்நாடகாவில் தொழில் வேண்டுமா? இருந்தும் கன்னடத்தை அவமதிப்பீர்களா? இதே நீங்கள் கர்நாடகாவில் இருந்திருந்தால் உங்கள் மீது கருப்பு மை வீச தயாராக இருந்திருப்போம். கர்நாடகாவுக்கும் மாநில மக்களுக்கும் எதிராக பேசினால் உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறி இருந்தார்.
https://www.youtube.com/watch?v=0N-L0DAJZBA
கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள்:
இதை அடுத்து கமலஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு கமலஹாசன் தரப்பில் விளக்கம் அல்லது மன்னிப்பு கேட்காவிட்டாலும் கர்நாடகாவில் அவருடைய படங்களை புறக்கணிக்க போகிறோம் என்று சில அமைப்புகள் அழைப்பும் விடுத்திருக்கின்றது. மேலும், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கமலஹாசன், அரசியல்வாதிகளுக்கு மொழியை பற்றி பேசும் கல்வி தகுதி கிடையாது. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். இந்த ஆழமான விவரங்களை வரலாற்று ஆசிரியர்கள், மொழியியல் வல்லுநர்கள், அகழ்வாராய்ச்சிகளிடம் விட்டுவிடலாம். நான் சிவா அண்ணாவிடம் அன்பின் அடிப்படையில் தான் பேசினேன். இது ஒரு பதில் அல்ல, விளக்கம். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது என்று கூறி இருந்தார்.

கமல் விளக்கம்:
இதை அடுத்து கமலின் தக் லைப் படம் வெளியிட மாட்டோம் என்று கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக கர்நாடக உரிமை 20 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் நஷ்டம் தான். இப்படி இருக்கும் நிலையில் கர்நாடகாவின்
முதல் அமைச்சர் அளித்த பேட்டியில், கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் நாங்கள் படத்தை அனுமதிக்க மாட்டோம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். கன்னடத்திற்கு எதிரான எந்த அற்பதனமான கருத்தும் பொறுத்துக் கொள்ள முடியாது.

கர்நாடக முதல் அமைச்சர் பேட்டி:
அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் நாங்கள் எங்கள் முடிவை எடுப்போம். அதோடு மன்னிப்பு கேட்காவிட்டால் கமலுடைய எல்லா படங்களுமே தடை செய்யப்படும். அதோடு இந்த சர்ச்சை தொடர்பாக நடிகர் சிவராஜ்குமாரை கமலஹாசனுடன் பேசுமாறு கேட்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து பாடகர் சோனு நிகாம், பிற மொழி நடிகர்கள் வந்து கன்னடம் பற்றி பேசினால் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? இதை சகித்துக் கொள்ள முடியாது. திரைப்பட வர்த்தக சபையின் நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன். இந்த விஷயத்தில் அரசு அவர்களுடன் உள்ளது என்று கூறியிருக்கிறார். இதற்கு கமல் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






