செல்பி எடுக்க சிவகுமாரை கலாய்த்த கஸ்தூரி.! ஒரு விவஸ்தை இல்லையா என்று கடுப்பான கார்த்தி.!

0
1156
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகுமார். சினிமாவில் இவர் நடிப்பதை நிறுத்திவிட்டாலும் இவரை தனிப்பட்ட முறையில் பல பேர் பின்தொடர்கின்றனர். காரணம், அந்த அளவிற்கு சிவகுமார் ஒழுக்கமானவர்.

-விளம்பரம்-
July Kaatril Audio Launch Stills

இத்தனை ஆண்டுகள் கட்டிக்காத்த அந்த நல்ல பெயரை ஒரே ஒரு செல்ஃபீ மூலம் இழந்தார் சிவகுமார். கடந்த சில மதத்திற்கு முன்பும் சமீபத்திலும் நடிகர் சிவகுமார், தன்னிடம் செல்பி எடுக்க வந்த நபர்களின் செல்போனை தட்டி விட்ட வீடியோ பெரும் வைரலானது.

- Advertisement -

இந்த சம்பத்திற்கு பின்னர் சிவகுமார் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. பின்னர் சூர்யாவும், கார்த்தியும் இதற்கான வருத்தத்தை தெரிவித்தனர். தற்போது இந்த விடயத்தை பலரும் மறந்த நிலையில் சமீபத்தில் கஸ்தூரி இதனை மீண்டும் கிளப்பியுள்ளார்.

சமீபத்தில் ‘ஜூலை காற்றில்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், நடிகர் கார்த்தி, நடிகை கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய கஸ்தூரி, கார்த்தியுடன் செல்பி எடுக்க முயன்றார்.

-விளம்பரம்-

கார்த்தியும் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்த போது நடிகை கஸ்தூரி, உங்க அப்பா இல்ல அதனால அவசரமாக ஒரு செல்பி எடுத்துக்கொள்கிறேன் என்று கிண்டலடித்தார். இதனால் கடுப்பான கார்த்தி, மேடையில் பேசுகையில், யாருக்கும் பொறுப்பு இல்லாமல் போய்விட்டது. கேட்டு பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று ஒரு மரியாதை இல்லாமல் போய்விட்டது.

மூஞ்சிக்கு முன்னாடி கொண்டு வந்து போனை நீட்டுவது. அதிலும் முன்னாடி ஒரு ஃபிளாஷ் பின்னாடி ஒரு ஃபிளாஷ் அவ்வளவு ஃபிளாஷ் கண்ணில் பட்டால் முன்னாடி இருப்பார்கள்என்ன அவர்கள் என்ற ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. கேட்டு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாத அளவிற்கு நாம் ஆகிவிட்டோம் என்று வருத்தமாக உள்ளது, என்று கொஞ்சம் கனத்த குரலில் கூறினார்.பின்னர் அதனை பொடியாக சொல்வது போல முடித்துவிட்டார்

Advertisement