‘சர்தார்’ படக்குழுவினர் அனைவருக்கும் காஸ்ட்லி வாட்டர் பாட்டிலை பரிசளித்த கார்த்தி. ஒரு பாட்டில் விலை மட்டும் இத்தனை ஆயிரமா.

0
529
- Advertisement -

சர்தார் பட வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினருக்கு நடிகர் கார்த்தி கொடுத்திருக்கும் பரிசு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் ‘பருத்தி வீரன்’ என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
sardar

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விருமன்’ . இந்த படம் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலில் வாரி குவித்து இருக்கிறது.

- Advertisement -

கார்த்தி திரைப்பயணம்:

அதோடு பாக்ஸ் ஆபிஸிலும் இந்த படம் இடத்தை பிடித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து கார்த்தி பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குநர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு ஆன ‘பொன்னியின் செல்வன்’ படம் செப்டம்பர் மாதம் வெளியாகி இருக்கிறது. இந்த படமும் உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. இந்த படத்தில் வந்தியத்தேவன் ரோலில் கார்த்தி மிரட்டி இருந்தார்.

சர்தார் படம்:

இதனைத் தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் சர்தார். இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கார்த்தி, ராஷிகா கண்ணா, ரஜியா விஜயன், லைலா, முனீஸ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் கார்த்தியின் சர்தார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

படத்தின் விமர்சனம்:

படத்தில் இரட்டை வேடத்தில் கார்த்திக் நடித்திருக்கிறார். மேலும், படத்தில் அப்பா கார்த்தி ராணுவ உளவாளியாக இருக்கிறார். மகன் கார்த்தி போலிஸ் அதிகாரியாக இருக்கிறார். படத்தில் தண்ணிர் ப்ரச்சனை குறித்து பேசப்படுகிறது. நோய்க்கு காரணம் தண்ணீர் இல்லை, வாட்டர் பாட்டிலில் தான் பிரச்சனை என்று கூறப்படுகிறது. தண்ணீர் பிரச்சனையை கையில் எடுத்து இயக்குனர் கதையைக் கொண்டு சென்ற விதம் சிறப்பாக இருக்கிறது.

கார்த்தி கொடுத்த பரிசு:

இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை செய்திருந்தது. இந்நிலையில் சர்தார் பட வெற்றியை கொண்டாடும் விதமாக கார்த்தி பரிசு கொடுத்து இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினார்கள். அப்போது இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்குமே நடிகர் கார்த்தி முப்பதாயிரம் மதிப்புள்ள வெள்ளி வாட்டர் பாட்டிலை பரிசாக கொடுத்திருக்கிறார்.

Advertisement