பருத்திவீரனுக்கு முன்பே கார்த்தி மிஸ் செய்த சூப்பர் ஹிட் படம் – அதுவும் லைலா நடிச்சது.

0
460
laila
- Advertisement -

நடிகர் கார்த்தி மிஸ் செய்த சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. கடந்த 2007-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பருத்தி வீரன்’ என்ற படம் மூலம் தான் கார்த்தி தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். விருமன் படம் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

- Advertisement -

விருமன் படம்:

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடித்து இருக்கிறார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலில் வாரி குவித்து இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படம்:

அதோடு பாக்ஸ் ஆபிஸிலும் இந்த படம் இடத்தை பிடித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து கார்த்தி பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படம் செப்டம்பர் மாதம் திரையில் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

சர்தார் படம்:

இதனைத் தொடர்ந்து கார்த்திக் தற்போது சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் திரில்லர், அதிரடி படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் ராஜீஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் கார்த்தி மிஸ் செய்த படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது.

கார்த்தி மிஸ் செய்த படம்:

நடிகர் கார்த்தியின் முதல் திரைப்படம் பருத்திவீரன். ஆனால், இந்த படத்திற்கு முன்பே கார்த்தி அவர்கள் பிரியா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் படத்தில் நடிக்க இருந்தது. இந்த படத்தில் பிரசன்னா நடித்த கதாபாத்திரத்தில் கார்த்திக் நடிக்க வேண்டியது. அப்போது அவருக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை என்பதால் கார்த்தி அந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.

Advertisement