மலை மேல சொல்லிப் பாடுற மாதிரி ஒரு பாட்டு சொல்லுன்னானு கேட்டேன் – அவர் சொல்லித்தந்த பாட்டு தான் இது.

0
436
vijay
- Advertisement -

கைதி படம் குறித்து கார்த்தி அளித்த பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கார்த்தி. கடந்த 2007-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பருத்தி வீரன்’ படம் மூலம் தான் கார்த்தி தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். விருமன் படம் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி சங்கர் என பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர்.

- Advertisement -

விருமன் படம்:

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் ராஜா நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து கார்த்தி அவர்கள் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படம்:

இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர், ட்ரைலர் எல்லாம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இன்னும் படத்தின் ரிலீஸுக்கு இரண்டு வாரங்களே இருக்கிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. இதனை அடுத்து கார்த்தி தற்போது சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

சர்தார் படம்:

இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் திரில்லர், அதிரடி படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் ராஜீஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் கார்த்தி அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் கைதி படம் குறித்து கூறியிருந்தது, கைதி படத்தில் மலை மீது நின்று அண்ணாமலையார் பாட்டு பாடுவேன். அது உண்மையிலுமே எனக்கு தெரியாது. என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று கொண்டிருப்பார்.

கார்த்தி அளித்த பேட்டி:

அப்போது மலையின் மீது இருப்பதினால் சாமி பாடல் பாட வேண்டும் என்று அவரிடம் கேட்டதற்கு நான் திருவண்ணாமலையில் தான் இருக்கிறேன். நான் அடிக்கடி இந்த பாடலை தான் பாடுவேன் என்று அவர் கூறினார். அவர் சொன்ன பாடலை தான் நான் அப்படியே உள்வாங்கிக் கொண்டு பாடினேன். அது இந்த அளவிற்கு பிரபலமாகும் என்று நான் நினைத்து பார்க்கவில்லை என்று கூறியிருந்தார். லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து கைதி 2 படம் உருவாக இருப்பதாக லோகேஷ் அறிவித்து இருக்கிறார்.

Advertisement