தனது அண்ணியுடன் கார்த்திக் நடிக்கும் முதல் படம்.! வெளியான சுவாரசிய தகவல்.!

0
948
- Advertisement -

பிரபல பழம்பெரும் நடிகரான நடிகர் சிவகுமார் மகன்களான நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா இருவருமே திரைத் துறையில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று இவருக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடிகர் சூர்யா ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும் நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாக ஒரு தகவல் வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி சூர்யாவின் மனைவியும் கார்த்தியின் அண்ணியும் ஆன நடிகை ஜோதிகா உடன் ஒரு புதிய படத்தில் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் என்று இயக்குனர் இயக்குகிறார்.

- Advertisement -

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கைதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில்தான் நடிகை ஜோதிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் கார்த்தி இறுதியாக நடித்த தேவ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விவரத்தை பெறவில்லை. ஆனால், நடிகை ஜோதிகா இறுதியாக நடித்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் கார்த்தியுடன் நடிகை ஜோதிகா கைகோர்த்துள்ள படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது எனவே இந்த படம் கார்த்திக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

-விளம்பரம்-

Advertisement