தனக்கு சூப்பர் ஹிட் பாடலை கொடுத்த தன் மாஸ்டருக்கு நன்றி மறவாமல் தனுஷ் செய்த உதவி

0
584
dhanush
- Advertisement -

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சிவசங்கர் மாஸ்டருக்கு தனுஷ் உதவி செய்ய முன் வந்துள்ளார். இந்திய சினிமா உலகில் மூத்த நடன இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் 1300 படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார். மேலும், ஜாப்பனீஸ் உட்பட 10 மொழிகளில் சிவசங்கர் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-233-575x1024.jpg

ஆனால், சமீபகாலமாக இவருக்கு நடனத்திலும், நடிப்பிலும் வாய்ப்புகள் குறைந்தது. இப்படி ஒரு நிலையில் இவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின் இவரின் உடல்நிலை மோசமாகி தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இவரின் சிகிச்சைக்கு அதிக செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால், சிகிச்சைக்கான கட்டணத்தை அவருடைய குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை.

இதையும் பாருங்க : யூடூயூபில் கொட்டும் பணம் – Bmw காரை வாங்கிய 2 மாதத்தில் மற்றொரு புதிய கார். இந்த காரோட விலை எவ்ளோ தெரியுமா ?

- Advertisement -

இந்நிலையில் என்னுடைய அப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். எங்களிடம் சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை. அதனால் அவருக்கு தயவுசெய்து உதவுங்கள் என்று சிவசங்கர் மாஸ்டர் மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் சிவசங்கர் மாஸ்டருக்கு நடிகர் தனுஷ் உதவ முன் வந்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருடா திருடி’ படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த பாடலுக்கு சிவசங்கர் மாஸ்டர் தான் நடனம் அமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு உதவி செய்து இருக்கிறார் தனஷ். ஏற்கனவே நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement