ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா படம் குறித்து நடிகர் கார்த்தி பதிவிட்டிருக்கும் ட்விட் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஃபர்ஹானா. இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கிறார்.

எஸ்.ஆர். பிரபு இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், கிட்டி, குக் வித் கோமாளி சக்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இஸ்லாமிய பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மதக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இஸ்லாமிய குடும்பத்தில் இருக்கிறார். இவருடைய கணவர் படிக்காதவர்.

Advertisement

ஃபர்ஹானா படம்:

இவர் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என நினைக்கும் மனநிலையை உடையவர். ஆனால், குழந்தைகளை எப்படியாவது படித்து நல்ல வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், தன்னைப் போல தன் குழந்தைகளும் கஷ்டப்படக் கூடாது என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நினைக்கிறார். இன்னொரு பக்கம் இவர்களுடைய குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள். இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் வேலைக்கு போக முடிவு எடுக்கிறார்.

படத்தின் கதை:

பின் அவர் கணவனின் ஒப்புதல் உடன் தன்னுடைய தோழியின் உதவி மூலம் தனியார் வங்கியில் கால் சென்டரில் வேலைக்கு செல்கிறார். அதனால் அந்த குடும்பம் வறுமையின் பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுகிறது. ஒரு கட்டத்தில் தன் தோழிகளைப் போல அதிக சம்பளம் கிடைக்கும் வேறொரு பிரிவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மாறுகிறார். ஆனால், அங்கு அவருக்கென்று ஒரு பெரிய பிரச்சினை காத்திருக்கிறது .

Advertisement

படம் குறித்த விமர்சனம்:

அதில் இருந்து அவர் எப்படி வெளி வருகிறார்? பிரச்சனையை ஐஸ்வர்யா ராஜேஷ் கணவர் எப்படி கையாண்டார்? ஐஸ்வர்யா இவருடைய வேலைக்கு ஏதாவது பிரச்சனை வந்ததா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் மதத்திற்கு எதிரான படமாக இருக்கிறது என்று சிலர் சர்ச்சையாக கருத்துக்களை பதிவிட்டாலும் பலர் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய படமாக அமைந்திருக்கிறது என்று படக்குழுவை பாராட்டியும் வருகிறார்கள்.

Advertisement

கார்த்தி டீவ்ட்:

இந்த படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கார்த்தியும் ஃபர்ஹானா படம் குறித்து ட்விட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், பொருளாதாரம் தொடர்பு, தொழில்நுட்பம் போன்றவை குடும்ப உறவில் பெரிய அழுத்தத்தை கொடுக்கிறது. இப்படி ஒரு நிலையில் அதற்கு எதிரான படமாக தான் ஃபர்ஹானா இருக்கிறது. இந்த விவகாரத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் இந்த படம் கையாண்டிருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், கிட்டி ஆகியோருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இயக்குனருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ஆகியோர் நன்றி தெரிவித்து பதில் ட்விட் போட்டு இருக்கிறார்கள்.

Advertisement