திருமணத்தில் அப்பாவை இன்சல்ட் செய்த கவுதம் கார்த்திக் ? இதான் காரணமா ?

0
238
gautham
- Advertisement -

திருமணத்தின்போது கௌதம் கார்த்திக் தன்னுடைய தந்தையை இன்சல்ட் செய்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருந்தவர் கார்த்திக். இவர் பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கின்றது. மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நவரச நாயகன் என்ற பட்டத்தை பெற்றவர் கார்த்திக். இடையில் சில காலம் இவர் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் இவர் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

கார்த்திக் குடும்பம்:

மேலும், கார்த்திக் அவர்கள் ராகினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மகன் தான் கௌதம். இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். கௌதம் கார்த்திக் அவர்கள் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சிப்பாய்,என்னமோ எதோ, வை ராஜா வை, இந்திரஜித், தேவராட்டம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

கௌதம் கார்த்திக் திரைப்பயணம்:

ஆனலும், இவருடைய படங்கள் எல்லாம் பெரிதாக மக்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் அவர்கள் ஆயுத சத்தம், செல்லப்பிள்ளை, பத்து தல, 1947 போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

கௌதம்- மஞ்சுமா திருமணம் :

இதனிடையே கௌதம்- மஞ்சுமா காதல் இணையத்தில் வைரலாகி இருந்தது. தேவராட்டம் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்து இருந்தார்கள். இருவரும் தேவராட்டம் படப்பிடிப்பில் இருந்த போது ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தனர். பின் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டி விட்டார்கள். சமீபத்தில் தான் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் திருமணம் உறவினர்களின் முன்னிலையில் எளிமையாக நடந்தது. இவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

தந்தையை இன்சல்ட் செய்த கௌதம்:

இந்த நிலையில் திருமணத்தின்போது கௌதம் கார்த்திக் தன்னுடைய தந்தையை இன்சல்ட் செய்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, தன் மகனின் திருமணத்தை தன்னுடைய திரையுலக நண்பர்கள் அனைவரையும் அழைத்து பிரம்மாண்டமாக நடத்த கார்த்திக் திட்டமிட்டு இருந்தார். ஆனால், கௌதம் கார்த்திக் தன்னுடைய திருமணத்திற்கு வெறும் 250 பேர் மட்டும் தான் வரவேண்டும் என்று கூறியிருக்கிறார். பின் கார்த்திக்கு ஒரே ஒரு அழைப்பிதழை தான் கொடுத்திருக்கிறார். இதனால் தான் நடிகர் கார்த்திக் அப்செட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement