பேட்ட படத்தில் நான் ஒரு காட்சியில் வந்திருக்கேன் கண்டுபுடிங்க.! சவால்விட்ட கார்த்திக் சுப்புராஜ்.! இதான் அந்த காட்சி.!

0
1111
- Advertisement -

சமீப காலமாக ரஜினி, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தேர்தெடுத்து நடித்து வருகிறார், அதனால், தான் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அளித்து வருகிறார் ரஜினி. அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் சிம்ரன், த்ரிஷா, சசி குமார், மேகா ஆகாஷ் என்று பலர் நடித்திருந்தனர். கடந்த பொங்கல் பண்டிகை அன்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று தற்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜும் நடித்துள்ளார் என்று சொன்னால் பலரும் நம்பமாட்டார்கள். ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜ், தான் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளதாகவும் முடிந்தால் கண்டுபிடியுங்கள் என்று ரசிகர்களுக்கு சவால் விட்டார்.

இவர் சொன்ன இந்த விடயத்தை பலரும் நம்பாமல் இருந்தனர். ஆனால், உண்மையில் இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் நடித்துள்ளார். இந்த விடயம் ரசிகர்களுக்கு மிக வியப்பாக அமைந்துள்ளது. இதோ அந்த காட்சிகள். கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ‘சூதுகவ்வும்’ படத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement