காலம் போன காலத்துல குழந்தை தேவையான்னு சொன்னாங்க – கார்த்திகை தீபம் சீரியல் நடிகர் யூசப் அளித்த பேட்டி

0
85
- Advertisement -

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் யூசுப் ஃபெரோஸ்கன். இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் வில்லன் ரோலில் தான் மிரட்டி இருந்தார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை கார்த்திகை 2 சீரியலில் முனியாண்டி என்ற ரோலில் வில்லனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இதற்கிடையே இவர் ஏகவல்லி என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான்.
யூசுப் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானவர். அதேபோல் ஏகவள்ளி திருமணமாகி விதவையானவர். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

- Advertisement -

ஏகவள்ளி- யூசப் பற்றிய தகவல்:

அதுமட்டுமில்லை ஏகவள்ளி வேற யாரும் இல்லை யாரடி நீ மோகினி சீரியலில் பேயாக வந்த யமுனாவின் அக்கா தான். ஏகவள்ளியும் நிறைய சீரியல்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். சமீபத்தில் தான் இவர்களுடைய வளைகாப்பு நடைபெற்று இருந்தது. சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியிருந்தார்கள்.

ஏகவள்ளி- யூசப் பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஏகவள்ளி- யூசப் கூறியிருப்பது, எங்க ரெண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். எனக்கு விவாகரத்து ஆகி ரெண்டு குழந்தைகள். ஒரு பொண்ணு, ஒரு பையன். அவர்கள் விதவை. ஒரு பையன் இருக்கிறார். நாங்கள் இருவருமே நட்பு ரீதியாக பழக்கம் வந்தது. அதற்குப்பின் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் எல்லோருமே ஒன்றாக தான் இருக்கிறோம். நான் அவர்களிடம் எந்த கண்டிசனையும் போடவில்லை. அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே நான் ஏற்றுக் கொண்டேன்.

-விளம்பரம்-

ஏகவள்ளி சொன்னது:

என்னையும் அவர் அப்படி ஏற்றுக் கொண்டார். எந்த ஒரு கண்டிஷனுமே போட்டு வாழவில்லை. எங்களுடைய நாளாவது குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். உடனே ஏகவள்ளி, அவர் மதம் மாற வேண்டும் என்று என்னை சொல்லவில்லை. இவரை முதன் முதலில் டிவியில்தான் என்னுடைய அம்மா பார்த்தார். இவர் ரொம்ப கொடூரமான வில்லனாக நடித்திருந்தார். ஆனால், உண்மையில் இவர் சீரியலில் தான் அப்படி இருக்கிறார். நிஜத்தில் அப்படி கிடையவே கிடையாது.

கிண்டல் கேலி:

குழந்தை போல துரு துரு என்று ஏதாவது ஒன்று செய்து கொண்டே விளையாட்டுத்தனமாக இருப்பார்.
இவர் பிஸியாக இருக்கும்போது கூட என்னுடைய குழந்தைகள்தான் என்னை கவனித்துக் கொள்கிறார்கள். எல்லோருமே பாப்பாவுக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள். என் தங்கை, காலம் போன காலத்தில் குழந்தை தேவையா என்றெல்லாம் கேலி செய்திருக்கிறார். ஆனால், எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசுகிறார்.

Advertisement