அக்கா, தங்கை என இருவரையும் திருமணம் செய்த கார்த்திக் – வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்.

0
689
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் கார்த்திக். இவர் சிவாஜி, எம்ஜிஆர் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் சொலித்துக்கொண்டிருந்த போது அவர்களில் ஒருவராக இருந்தவர் முத்துராமன் இவரது மகன்தான் கார்த்திக். இவரின் நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்று தமிழ் சினிமா உலகில் இன்றும் நவரச நாயகனாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் கார்த்திக்.

-விளம்பரம்-

சினிமா அறிமுகம் :

மேலும், இவர் நடிகர் முத்துராமனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் கார்த்திக்.அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்த தோடு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

பின் சில காலம் இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது கூட இவர் அந்தகன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சிறந்த நடிகருக்கான நந்தி விருது உள்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இப்படி பட்ட நிலையில் தான் இவர் 1998ஆம் ஆண்டு தன்னுடைய “சோலைக்குயில்” என்ற பதில் நடித்த நடிகை ராகினியை திருமணம் செய்து கொண்டார்.

முதல் மற்றும் இரண்டாவது திருமணம் :

மேலும் கார்த்திக் – ராகினி தம்பதிக்கு கவுதம் கார்த்திக் மற்றும் கையன் கார்த்திக் என இரண்டு மகன்கள் உள்ளனர். பின்னர் சில படங்களில் நடித்த இவர் நாங்கு வருடங்கள் அவர் முதல் மனைவியின் தங்கை ரதியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு திரன் கார்த்திக் என்ற மகன் உள்ளார். இப்படி பட்ட நிலையில் தான் இவரது முதல் மற்றும் இரண்டாம் மனைவியின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

கவுதம் கார்த்திக்

கார்த்தியின் மகன்களில் முதல் மனைவியின் மகன் கெளதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை நடிகரான திகழ்ந்து வருகிறார். இவர் கடல் தொடங்கி, ரங்குன், ஹாரா ஹாரா மஹாதேவகி, மிஸ்டர் சந்திரமௌலி, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் கடந்த ஆண்டுதான் மஞ்சுமா மோகன் அவர்களை திருமணம் செய்து கொண்டார். கவுதம் கார்த்தி தற்போது நடிகர் சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் மார்ச் மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

Advertisement