இந்த படத்த ஏண்டா எடுத்தோம்னு 10 வருஷம் கழிச்சி Feel பண்ணுவார் – பிரபல நடிகர் தாக்கு. யார்னு தெரியுதா ?

0
639
lovetoday
- Advertisement -

லவ் டுடே படத்தை ஏண்டா எடுத்தோம்ன்னு பிரதீப் ரங்கநாதன் ஒரு நாள் வருத்தப்படுவார் என்று பிரபல நடிகர் கூறி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இவர் முதலில் குறும்படம் தான் எடுத்து இருந்தார். அதன் பின் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் “கோமாளி” படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ரீதிகா மோகன், கே. எஸ். ரவிக்குமார், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். படத்தில் 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த 90s இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லி இருந்தார் இயக்குனர்.

- Advertisement -

கோமாளி படம்:

இந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு, வசூலிலும் நல்ல வேட்டை ஈட்டி இருந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் பிரதீப் ரங்கநாதன்நடித்து இருந்தார் . இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

லவ் டுடே படம்:

இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள்நடித்து இருந்தண்ட் . காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகிஇருந்தது. படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார். காதலர்களுக்குள் நடக்கும் சண்டைகள், சந்தேக எண்ணங்கள் போன்றவற்றை வேடிக்கையாக காட்டியதன் மூலம் இந்த பட இளசுகள் மத்தியில் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-

100 நாளை கடந்த படம் :

திரையரங்குகளில் 100 நாட்களை கடந்த இந்த படம் ஓடிக்கொண்ட இருக்கும் நிலையில் சமீபத்தில் தான் இந்த படம் OTTயிலும் வெளியானது. என்னதான் இந்த படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டாலும் இந்த படம் OTTயில் வெளியான போது ஆண்களின் Toxic நடத்தையை ரொமாண்டிசைஸ் செய்யும் விதத்திற்காகவும், பெண்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் படியும் இருப்பதாக பலராலும் விமர்ச்சிக்கப்பட்டு வந்தது.

லவ் டுடே குறித்து கார்த்திக் குமார் :

இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார் பேசியுள்ளதாவது ‘லவ் டுடே திரைப்படம் பெண்களை வெறுக்கிற அளவிற்கு ஒரு படமாக இருந்தது அது ஒரு ஆணின் பார்வையிலிருந்து இருக்கும் ஒரு கதை ஆனால், அதனை காமெடியாக சொன்னதால் அந்த படம் எல்லார் மத்தியிலும் ஹிட் ஆகிவிட்டது. ஆனால், பிரதீப் ரங்க நாதனே 10 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை திருப்பி பார்த்தால் இந்த படத்தை நாம் ஏன்டா எடுத்து இருக்கக் கூடாது என்று நினைப்பார்’ என்று கூறியுள்ளார்.

Advertisement