பொதுவாகவே தமிழ் சினிமாவில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் கேரள மண்ணில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் பத்மினி, அம்பிகா, ராதா, ஊர்வசி தொடங்கி தற்போது இருக்கும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மஞ்சு மோகன் வரை என பல நடிகைகள் கேரளாவில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வரிசையில் மலையாள சினிமாவில் இருந்து தமிழில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மோனிஷா உன்னி.
இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர். இவர் தன்னுடைய 16 வயதிலேயே மலையாள மொழி படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். அது மட்டும் இல்லாமல் முதல் படத்தின் மூலமே இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதனை அடுத்து இவர் சில மலையாள படங்களில் நடித்திருந்தார்.
அதற்குப் பின்பு ஸ்ரீதர் ராஜன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படத்திற்கு டி ராஜேந்திரன் தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி தொடர்ந்து படங்களில் நடித்திருந்தார். அதிலும் இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானது உன்னை நினைத்தேன் பாட்டு படித்தேன் என்ற படத்தின் மூலம் தான்.

இதனால் இவர் தென்னிந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்டு வருவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்ஆனால், மோனிஷா வாழ்க்கையில் யாரும் நினைக்காத அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது. கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மோனிஷா தன்னுடைய தாயுடன் ஆலப்புழா அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. விபத்தில் மோனிஷா அநியாயமாக உயிர் இழந்தார். அவருடைய தாய் சில காயங்களுடன் உயிர்த்தப்பினார்.







