பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த புதிய நடிகர்.! அதிலும் இப்படி ஒரு ரோலில்.!

0
898
- Advertisement -

தற்போது உள்ள சினிமா ரசிகர்களில் அனைவரும் ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை படித்திருப்பீர்களா என்பது சந்தேகம் தான். அப்படி நீங்கள் படித்திருப்பீர்கள் என்றால் ‘பாகுபலி’ என்ற கதை எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

-விளம்பரம்-

வரலாற்று சிறப்புமிக்க இந்த நாவலை திரைப்படமாக எடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அவ்வளவு ஏன் வரலாற்று கதைகளை எடுக்கும் கெட்டிக்காரரான மணிரத்னம் கூட ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கவுள்ளார் என்று பல ஆண்டுகளாக ஒரு பேச்சும் நிலவிவருகிறது.

- Advertisement -

இந்த படத்தில் விஜய், அஜித், விக்ரம் போன்ற பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுப்பதாக திட்டமிருந்தார் மணிரத்னம். ஆனால், அது நடக்காமல் போக விக்ரம், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து இப்படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், சமீபத்தில் கிடைக்கபெற்ற தகவல்படி விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் கார்த்திக் கமிட் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் தான் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. இதனை பற்றிய மேலும் சில தகவலை விரைவில் உறுதி செய்கிறோம்.

-விளம்பரம்-
Advertisement