ரெட்ரோ படம் பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.

இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்தார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து தற்போது நடிகர் சூர்யா அவர்கள் ரெட்ரோ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இயக்கி இருக்கிறார்.
ரெட்ரோ படம்:
இந்த படத்தை சூர்யாவின் 2D மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் சங்கர் உட்பட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

கார்த்திக் சுப்புராஜ் பேட்டி:
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஆன்லைன் விமர்சனங்களை பார்க்க கூடாது என்பதை ரெட்ரோ படத்தின் மூலம் தான் நான் உணர்ந்தேன். காரணம், நிறைய அஜெண்டாக்கள் உள்ளே கொண்டு வருகிறார்கள். நான் எல்லா ஆன்லைன் விமர்சனங்களையும் சொல்லவில்லை. சில விமர்சனங்களை பார்க்கும்போது நேர்மையாக இருக்கிறதா? இல்லையா? என்பது நமக்கே தெரியும்.
https://www.youtube.com/watch?v=y1Si3oAqMkw
விமர்சனம் பற்றி சொன்னது:
ஒரு படம் உருவாகும்போது 150 முதல் 120 பேர் உடைய உழைப்பு அதில் இருக்கும். அந்த படம் அவர்களுக்கு ஒரு பெரிய கனவாக இருக்கும். படம் அனைவருக்குமே பிடிக்கும் போது அது ஒரு விதமான சந்தோஷத்தை கொடுக்கும். ஆனால், அவர்களை மகிழ்ச்சியாகவே இருக்க கூடாது என்று தான் சில விமர்சகர்கள் இப்படி செய்கிறார்கள். நாம் வெற்றி பெற்றோமா? இல்லையா? என்பதை மற்றவர்கள் சொல்லக்கூடாது, நாம்தான் சொல்ல வேண்டும். திரையரங்கு சென்று பார்வையாளர்களுடைய மன நிலையை புரிந்து கொள்கிறேன். அவர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

படத்தின் கதை:
படத்தில் ஜோஜு ஜார்ஜ் தூத்துக்குடியில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார். இவரிடம் அடியாட்களாக சூர்யாவின் அப்பா வேலை செய்கிறார். ஒரு கட்டத்தில் சூர்யாவின் தந்தை சண்டையில் இறந்து விடுவதால் சூர்யாவை ஜோஜு ஜார்ஜின் மனைவி தான் எடுத்து வளர்க்கிறார். தனக்கு அடியாளாக சூர்யாவை ஜோஜு ஜார்ஜ் வளர்க்கிறார். இதற்கிடையில் சூர்யா, பூஜா காதலிக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராகிறார்கள்.அப்போது சூர்யா அடிதடியை விட்டு விட முடிவு செய்தார். இன்னொரு பக்கம் அரசு கருவூல பொருட்களை எல்லாம் தன்னுடைய வளர்ப்பு தந்தையான ஜோஜுக்கு தெரியாமலேயே சூர்யா மறைக்கிறார். இதை அறிந்த ஜோஜு ஜார்ஜ், பூஜாவை கொலை செய்ய நினைக்க, சூர்யா தன்னுடைய வளர்ப்பு தந்தை ஜோஜு ஜார்ஜ் கையையே வெட்டி விடுகிறார். இதனால் சூர்யா சிறைக்கு செல்கிறார். பின் பூஜா நாட்டை விட்டு அந்தமான் செல்கிறார். பூஜாவை தேடி திரையிலிருந்து சூர்யா தப்பித்து அந்தமானுக்கும் செல்கிறார். சூர்யா இருக்கும் இடத்தை அறிந்த ஜோஜு சூர்யா தன்னுடைய அடியாட்களுடன் அந்தமானுக்கு செல்கிறார். அனைத்து பிரச்சனைகளையும் சூர்யா முறியடித்தாரா? பூஜா என்ன ஆனார்? சூர்யா- பூஜா இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தினுடைய மீதி கதையே.






