சினிமாவில் வளரும்போதே இயக்குனர்களின் முடிவில் சிவகார்த்திகேயன் தலையிட்டுப்பது குறித்து கார்த்திக் சுப்புராஜ் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. எளிய பின்னணியிலிருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டாக்டர், டான் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த பிரின்ஸ் படம் கடந்த சில வாரங்களுக்கு முன் தான் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:
இயக்குனர் ரவி தான் அயலான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார்.
மாவீரன் படம்:
இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதனை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் மாவீரன் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டிருக்கிறது. காரணம், படத்தில் சில காட்சிகளை சிவகார்த்திகேயன் மாற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறராம். அதற்கு இயக்குனர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
ஷூட்டிங் நிறுத்தம்:
இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மாவீரன் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து ரசிகர்கள் பலரும் விமர்சித்து இருந்தார்கள். இந்த நிலையில் வளரும்போது சிவகார்த்திகேயன் இயக்குனர்களிடம் நடந்து கொண்டது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதில் அவர், ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது. அவர் சிவகார்த்திகேயனிடம் பேசுங்கள் என்று சொன்னார்.
கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டி:
சிவகார்த்திகேயனிடம் பேசும்போது வில்லனாக பாபி சிம்ஹா வேணாம் சத்யராஜ் போன்ற பெரிய ஆட்களை போடுங்கள் என்று கூறினார். ஆனால், எனக்கு பாபி சிம்ஹா தான் போட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். அதனால் சிவகார்த்திகேயன் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இப்படி சிவகார்த்திகேயன் வளரும்போது இயக்குனர்களின் முடிவில் தலையிட்டு இருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.