‘சூர்யா 44’ படத்தின் கதை குறித்து கார்த்திக் சுப்புராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்தார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து தற்போது நடிகர் சூர்யா அவர்கள் தன்னுடைய 44வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2D மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.
சூர்யா 44 படம்:
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் சங்கர் உட்பட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு எல்லாம் முடிந்து விட்டது.
கார்த்திக் சுப்புராஜ் பேட்டி:
தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. அதில் சூர்யா நடிக்கும் படத்திற்கு ரெட்ரோ என்ற பெயரிடப்பட்டிருக்கிறது. இதை அடுத்து பலரும், இந்த படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதை என்று சோசியல் மீடியாவில் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சூர்யாவின் 44வது படமான ரெட்ரோவை எல்லோருமே கேங்ஸ்டர் படமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தின் கதை:
அது கேங்ஸ்டர் படமே கிடையாது. ஆக்சன் காட்சிகளுடன் கூடிய ஒரு காதல் படம். அதனுடைய மூல கதை காதலை சுற்றி தான் நகர்கிறது. எனக்கு ரொம்ப நாளாக ஒரு லவ் ஸ்டோரி பண்ணனும் என்று ஆசை. அதை இந்த படத்தில் செய்திருக்கிறேன். அதோடு படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும். அதனால் அது கேங்ஸ்டர் படம் என்று கூற முடியாது. இந்த படத்தை ஏன் கேங்ஸ்டர் படம் என்று சொன்னார்கள் என்றே எனக்கு புரியவில்லை. இந்த படம் முடித்த போது சூர்யா சார், என்னுடன் எடுத்த போட்டோவை போட்டு பிரதர் பார் லைஃப்னு என்று போஸ்ட் போட்டு இருந்தார்.
சூர்யா பற்றி சொன்னது:
ஆரம்பத்தில் அவரை வைத்து படம் எடுக்கணும் என்று ஆசை இருந்தது. ஒரு நடிகராக அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு முன்னாடியே அவரிடம் படத்தினுடைய கதையை சொன்னேன். சூர்யா ரொம்ப ப்ரொபஷனல். படம் ஆரம்பித்தபோது அவர் எவ்வளவு ஜாலியான ஆள் என்று தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் ஜெயராம் சாரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார். செட்டே ரொம்ப கலகலப்பாக இருக்கும் என்று கூறி இருந்தார்.