கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம் இவருடன் தான்.! அவரே சொன்ன மாஸ் தகவல்.!

0
571
Karthik-subburaj
- Advertisement -

குறும்பட இயக்குனராக இருந்து பின்னர் ‘பிசா’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த கார்த்திக் சுப்புராஜ் அதன் பின்னர் ‘ஜிகர்தண்டா’ என்ற வெற்றி படத்தையும் கொடுத்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் ‘இறைவி’, ‘மெர்குரி ‘ போன்ற படங்களில் ரசிகர்களை ஏமாற்றிய கார்த்திக் சுப்புராஜ் தற்போது ரஜினியை வைத்து மாஸ் படத்தை கொடுத்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்தபடத்தின் வெற்றி கொண்டாடட்டம் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் நேற்று (ஜனவரி 27) நடைபெற்றது. இந்த விழாவின் போது செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சுப்புராஜிடம், அவரது அடுத்த படத்தின் ஹீரோ குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், அடுத்த படத்தை தனுஷை வைத்து இயக்க போவதாக கூறியுள்ளார். பேட்ட படத்திற்கு பின்னர் ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் படம் இயக்குவார் என்று எதிரிபார்த்த நிலையில் தற்போது ரஜினியின் மருமகன் தனுசை வைத்து படம் இயக்கவுள்ளார் இந்த பேட்ட இயக்குனர்.

-விளம்பரம்-
Advertisement