மகான் படத்தில் வாணி போஜன் காட்சிகள் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விக்ரம். தற்போது விக்ரம் மற்றும் துருவ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் மகான். இந்த படத்தில் அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.மூன்று மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் மகான் படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மதுவினால் ஏற்படும் பிரச்சினைகளையும் விளைவுகளையும் அழகாக காண்பித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப்பிறகு கார்த்திக் சுப்புராஜின் மகான் படம் ரசிக்க வைத்திருக்கிறது.
சின்னத்திரை நயன்தாரா :
இந்நிலையில் நடிகை வாணிபோஜன் மகான் படக்குழுவின் மீது அதிர்ப்த்தியாக இருக்கிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ஆகிவருகிறது.சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் “தெய்வமகள்” சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார். தெய்வமகள் சீரியல் மூலம் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூட சொல்லலாம் .அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதற்கு பிறகு இவர் சில சீரியல்களில் மட்டும் நடித்தார். பின் இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு என பல மொழியில் பிசியாக படம் நடித்து வருகிறார்.
மகான் படத்தில் வாணிபோஜன்:
அந்த வகையில் தற்போது வாணிபோஜன் அவர்கள் மகான் படத்தில் நடித்திருக்கிறார். அதற்கான புகைப்படங்கள் எல்லாமே வெளியாகி இருந்தது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், மகான் படத்தில் இவர் நடித்த ஒரு காட்சிகள் கூட இடம்பெறவில்லை. அது மட்டுமில்லாமல் வாணிபோஜன் அவர்கள் மகான் படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் வெளியாகுவதற்கு முன்பு சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். ஆனால், படம் வெளியான பின்னர் படம் குறித்து எந்த பதிவையும் வாணி போஜன் போடவில்லை.
மகான் படத்தில் இருந்து வாணிபோஜன் காட்சிகள் நீக்கம்:
படத்தில் வாணி போஜன் காட்சிகள் ஒன்று கூட இடம்பெறவில்லை என்றாலும் படத்தின் படம் ஆரம்பிக்கும் முன்பு நன்றி என்று வாணிபோஜன் பெயரை குறிப்பிட்டு இருந்தார்கள். அதேபோல் படம் முடிந்த பிறகும் படத்தில் நடித்தவர்கள் கதாபாத்திரங்களின் பட்டியலில் வாணிபோஜன் பெயர் வந்தது. அதில் மங்கை கதாபாத்திரத்தில் வாணிபூஜன் நடித்து இருப்பது தெரியவருகிறது. இப்படி வாணிபோஜன் படத்தில் நடித்து இருந்தும் அவருடைய காட்சிகள் மட்டும் நீக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் அளித்த விளக்கம் :
இந்த நிலையில் இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் விளக்கமளித்தபோது, ‘சிம்ரனை விக்ரம் பிரிந்த பின்னர் வாணிபோஜனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது என்றும் இது குறித்த காட்சிகள்படமாக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பல காட்சிகள் படமாக்க முடியவில்லை என்றும் குறிப்பாக கூட்டம் அதிகமாக உள்ள காட்சிகளை படமாக்க முடியவில்லை என்பதால் வாணிபோஜன் கேரக்டர் படத்திலிருந்து தூக்கப்பட்டுவிட்டதாகவும் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.