-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

பேட்ட, ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து ‘மகான்’ படத்திலும் தன் மனைவியை நடிக்க வைத்துள்ள கார்த்திக் சுப்புராஜ். அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரத்தில்.

0
1786
mahaan

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் இன்ஜினியரிங் முடித்து இருக்கிறார். இருந்தாலும் சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தினால் மீடியாவுக்குள் நுழைந்தால். பின் 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பீட்சா படத்தின் மூலம் இவர் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படத்திற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஜகமே தந்திரம்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் மகான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். நடிகர் விக்ரம் மற்றும் துருவ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் மகான். இந்த படத்தில் அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் நடித்து சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

மகான் படம் பற்றிய தகவல்:

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். மூன்று மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் மகான் படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் மதுவினால் ஏற்படும் பிரச்சினைகளை அழகாக காண்பித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப்பிறகு கார்த்திக் சுப்புராஜின் மகான் படம் ரசிக்க வைத்திருக்கிறது.

மகான் படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி:

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பொதுவாக கார்த்திக் சுப்புராஜ் படத்தில் குறிப்பிட்ட நபர்கள் கண்டிப்பாக காண்பித்து விடுவார். அதிலும் அவரது அப்பா கண்டிப்பாக ஏதாவது ஒரு முக்கிய கதாபத்திரத்தில் வந்துவிடுவார்.அதிலும் பேட்ட படத்தில் தனது அப்பா மற்றும் மனைவி இருவரையுமே நடிக்க வைத்து இருப்பார் கார்த்திக் சுப்புராஜ். பேட்ட படத்தில் ஒரு காட்சியில் ஹாஸ்டல் வார்டனாக படத்தில் சேரும்போது அவரிடம் ஒரு பெண் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுப்பார்.

-விளம்பரம்-

கார்த்திக் சுப்புராஜ் மனைவி நடித்த படங்கள்:

அவர்தான் கார்த்திக் சுப்பராஜின் மனைவி. அதே போல ஜகமே தந்திரம் படத்திலும் கார்த்திக் சுப்புராஜின் மனைவி ஒரு சிறு காட்சியில் தோன்றி இருக்கிறார். இந்நிலையில் மகான் படத்திலும் கார்த்திக் சுப்புராஜ் மனைவி நந்தினி ஆனந்தன் என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது, மகான் படத்திலும் என்னுடைய மனைவி நந்தினி ஆனந்தன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டி:

அவருக்கு ஆர்வம் இருப்பதால் தான் நானும் நடிக்க ஒத்துக்கொண்டேன். பெரும்பாலும் அவர்கள் என்னுடைய படங்களில் தான் நடித்திருக்கிறார்கள். ஒருமுறை பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அவர்கள் கிளினிக்கை கவனித்துக் கொண்டிருப்பதால் பிற இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடியாமல் போகிறது. அவருக்கு நடிப்பதில் அதிக ஆர்வம். அதனால் தான் நான் என்னுடைய படங்களில் ஏதாவது ஒரு சிறு கதாபாத்திரம் கொடுக்கிறேன் என்று கூறியிருந்தார்.

நந்தினி ஆனந்தன் பற்றிய தகவல்:

மேலும், மகான் படத்தில் நந்தினி ஆனந்தன் கதாபாத்திரம் வரும். இவர் தமிழ்நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளாக மது எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி வரும் சட்டக்கல்லூரி மாணவி. இவர் தனது தந்தையாருடன் இணைந்து மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது இடங்களில் விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி வருகிறார். இவரது போராட்டங்களுக்காக 2016 ஆம் ஆண்டு வரையான நிலவரப்படி 55 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இருந்தும் இவர் மது எதிர்ப்புக்கு குரல் கொடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news