தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கரு.பழனியப்பன். பார்த்திபன் கனவு என்ற படத்தின் மூலம் இவர் முதன் முதலாக இயக்குனரானார். அதனைத் தொடர்ந்து சில படங்களை இயக்கி இருக்கிறார். சமீப காலமாக இவர் படங்களை இயக்குவதில்லை ஆனால், தமிழா தமிழா மூலம் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமானார். நீயா நானா நிகழ்ச்சிக்கு பின்னரே இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதனால் அடிக்கடி நீயா நானா நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டு இந்த நிகழ்ச்சியை கலாய்த்தும் வந்தனர்.
அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீயா நானா நிகழ்ச்சியில் சம்பாதிக்கும் மனைவிகள் மற்றும் அவரது கணவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் கோபிநாத் பேசிய ‘ஆனந்தமாக வாழ அறிவாக இருக்க அவசியம் இல்லை’ போன்ற வசனங்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்தது. அதே போல ஒரு தந்தையின் ஏக்கத்தை புரிந்துகொண்ட கோபிக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர் .
இந்த நிலையில் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கருபழனியப்பனை பலர் கேலி செய்து வந்தனர்.கருப்பு பழனியப்பனின் தமிழா தமிழா நிகழ்ச்சி கேலிக்கு உள்ளாகி இருக்கும் மற்றொரு முக்கிய காரணமே நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் பெரும்பாலும் யாரையும் உரிமையில் பேசுவது கிடையாது. அதேபோல விவாதங்களில் பெரும்பாலும் மக்கள் நினைக்கும் கருத்துக்களையே கோபிநாத் முன்வைத்து வருகிறார்.
புதியதோர் உலகம் செய்வோம்
— Dhivya (@Dhivya_Inclusiv) March 7, 2023
பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப்
பேசு சுயமரியாதை உலகுஎனப் பேர்வைப்போம்
ஈதேகாண் சமூகமே யாம் சொன்னவகையில்
ஏறு நீ! ஏறு நீ! ஏறு நீ! ஏறே
என்ற பாரதிதாசனார் மொழியில் வாழ்த்துக்கள் பல தோழர்…
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கரு பழனியப்பன் நீயா நானா நிகழ்ச்சி குறித்து பேசி இருக்கிறார். அதில் ‘என்னை ஏற்கனவே பாராட்டிய போது அதை நினைத்து நான் சந்தோஷப்படுத்த கிடையாது. அதேபோலத்தான் என்னை கேடு செய்த போதும் நான் அதைப்பற்றி வருத்தப்பட மாட்டேன். நீயா நானா என்பது சர்க்கஸில் பார் விளையாடுவது போல. 15 ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் பழகி விட்டார்கள் அது சிறப்பான நிகழ்ச்சி என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
அவர்கள் ரஜினிகாந்த் நாம் நளினிகாந்த் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் எப்போதும் சொல்லுவேன். அதேபோல நிகழ்ச்சியை தொடங்கிய எத்தனையோ பேர் விழுந்து இருக்கிறார்கள் ஆனால் எங்கள் நிகழ்ச்சி நின்று விட்டதே அதுவே பெரிய விஷயம்தான். நீயா நானாவின் பல நிகழ்ச்சியில் நான் பெரியார் பற்றி பேசி இருக்கிறேன் அதை பார்த்து தான் என்னை தமிழா தமிழா நிகழ்ச்சி தொகுத்து வழங்க அழைத்தார்கள்.
சன் டிவி & கலைஞர் டிவி இவரை இப்போதாவது பயன்படுத்துங்கள்…
— THAINESE PAULRAJ (@ThaineseP) March 7, 2023
தமிழா தமிழா நிகழ்ச்சி ஆரம்பித்த போது 52 எபிசோட் கடந்தால் போதும் என்று நினைத்தேன். ஆனால், 165 எபிசோடை கடந்துவிட்டோம் என்று பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். அதில் ‘ஜீ தமிழ் உடனான நான்கு வருட” தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.!சமூகநீதி,சுயமரியாதை,திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. நன்றி ஜீ தமிழ்’ என்று குறிப்பிட்டுள்ளார்.