விஜய்யிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட கருணாகரன்.! விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா.!

0
575
karunakaranvijay
- Advertisement -

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற “சர்கார்” இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள்.

-விளம்பரம்-

விஜய் ரசிகர்களிடன் தொடர்ந்து ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் கடும் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் நடிகர் கருணாகரனுக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக திட்டி தீர்த்தனர். அத்தோடு நடிகர் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை உருவாக்கினர்.

- Advertisement -

விஜய் ரசிகர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்தால் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க, காவல்துறை நடவடிக்கை எடுத்து வந்ததையடுத்து சர்ச்சைக்குரிய ட்வீட்டுகளை விஜய் ரசிகர்கள் டெலிட் செய்தனர். மேலும், பலரும் அவரை அலைபேசியிலும் திட்டித் தீர்த்தார்கள். இச்சம்பவம் தொடரவே, சில மாதத்துக்கு முன்பு ட்விட்டர் தளத்திலிருந்தே விலகினார்.

-விளம்பரம்-

இந்நிலையில், மீண்டும் ட்விட்டரில் இணைந்தாலும் எவ்வித கருத்தையும் வெளியிடாமல் இருந்தார். ஆனால், இன்று (ஏப்ரல் 19) தனது ட்விட்டர் பதிவில், ‘‘நான் பொதுவாக யாரையும் வெறுப்பதில்லை. நடிகர் விஜய்க்கு எதிராக வெறுக்கத்தக்க அந்த வார்த்தையை நான் பயன்படுத்தி இருக்கக் கூடாது. அதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். அவர் நான் விரும்பும் நடிகர், அவருக்கும் இது தெரியும். சமூக வலைதளத்தில் நான் பயன்படுத்திய  எந்தவொரு வார்த்தையாவது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார் கருணாகரன். இவர் மன்னிப்பு கேட்டாலும் விஜய் ரசிகர்கள் இவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Advertisement