விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க சென்ற கருணாகரனை வீட்டுக்கு திருப்பி அனுப்பிய போலீஸ்…!

0
1148
Karunakaran
- Advertisement -

சில நாட்களுக்கு முன் நடைபெற்ற “சர்கார்” இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள்.

-விளம்பரம்-

விஜய் ரசிகர்களின் தொடர் விமர்சனத்தால் “ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தை தெரிவித்துவிடுகிறது” என்று ட்வீட் செய்தார் நடிகர் கருணாகரன். விஜய் ரசிகர்கள் தொடர்ந்து வறுத்தெடுத்து வந்ததால் விஜய் ரசிகர்களை அடிமைகள் என்றும் கூறியிருந்தார் கருணாகரன்.

- Advertisement -

விஜய் ரசிகர்களிடன் தொடர்ந்து ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் கடும் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் நடிகர் கருணாகரனுக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக திட்டி தீர்த்தனர். அத்தோடு நடிகர் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை உருவாக்கினர்.

தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கு நடிகர் கருணாகரனுக்கும் வாக்குவாதம் முற்றிப்போக ஒரு சில ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தாகவும், இதனால் நடிகர் கருணாகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 8) காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

-விளம்பரம்-

karunakaran

அங்கிருந்த காவல் ஆணையரிடம் விஜய் ரசிகர்கள் தனக்கு அனுப்பிய மெசேஜ்களை காண்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து மெசேஜ்கள், எந்த எண்ணில் மிரட்டல் வந்த நம்பர், ஆபாசமாக பேசிய பதிவு, தொலைபேசி உரையாடல் போன்ற அனைத்தையும் ஆதாரமாக எடுத்து வாருங்கள் என்று காவல் ஆணையர் கூறிவிட்டதால், ஆதாரங்களை சமர்ப்பிக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு புகார் அளிக்க முடியாமலேயே வீடு திரும்பியுள்ளார்.

Advertisement