தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்பவர் கருணாஸ். இவர் தமிழ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழக அரசியல் வாதியும் ஆவார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ’நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இந்த ஒரு படத்திலேயே இவர் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். அதன் பின்னர் கருணாஸ் அவர்கள் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து உள்ளார். பின் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்தமாமா, ரகளபுரம் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்து தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார் கருணாஸ்.
அதுமட்டும் இல்லாமல் இவர் படங்களில் பாடியும் இருக்கிறார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே போல இவர் அரசியலில் அதிக ஈடுபட்டு காட்டி இருந்தார். ஆனால், சமீப காலமாக கருணாஸ் அரசியலுக்கு போவதில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், தற்போது கருணாஸ் அவர்கள் இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் தான் இயக்கும் ‘ஆதார்’ படத்தில் நடிக்கிறார்.
கருணாஸ் நடிக்கும் படங்கள்:
இந்த படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர் ரித்விகா நடிக்க இருக்கிறார். பின் கார்த்தி நடித்து வரும் விருமன் என்ற படத்திலும், சசிகுமாருடன் ஒரு படத்திலும் கருணாஸ் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் சல்லியர்கள் என்ற படத்தையும் கருணாஸ் தயாரித்து வருகிறார். இப்படி கருணாஸ் தமிழ் சினிமாவில் படு பிசியாக இருக்கிறார். இந்நிலையில் கருணாஸ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய முதல் பட அனுபவம் பற்றி பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,
கருணாஸ் அளித்த பேட்டி:
இயக்குனர் பாலா சார் மூலம் தான் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது. பாலா சார் என்னை கூப்பிட்டு இருந்ததாக சொன்னார்கள். நானும் பாலா சாரை பார்க்க சென்றேன். அங்கு எனக்கு இன்டர்வியூ எல்லாம் வைத்தார்கள். பின் நான், பாலா சார் என்னை கூப்பிடுகிறார். அப்போ ‘கானங்கருங்குயிலே கச்சேரிக்கு வரியா’ என்ற அளவிற்கு என்னை இசைத்துறையில் உயர்த்துவார். என்னுடைய மியூசிக் எல்லாம் ஹிட் ஆகி விடும் என்று தான் நினைத்து போனேன். ஆனால், அவர் என்னை படத்தில் நடிக்கிறாயா? என்று கேட்டார். ஒரு நிமிஷம் ஷாக் ஆகி நானும் சரி நடிக்கிறேன் என்று சொன்னேன்.
கருணாஸ் முதல் பட வாய்ப்பு:
பின் நான் மிமிக்கிரி எல்லாம் பண்ணுவேன். மேடை தான் என்னுடைய வாழ்க்கையை என்று பாலா சாரிம் சொன்னேன். உடனே அவர் மிமிக்கிரி பண்ணு என்று சொன்னார். நானும் எனக்கு தெரிந்ததெல்லாம் பண்ணேன். பிறகு அவர் சரி என்று சொன்னார். சொல்லப்போனால் அவருக்கு என்னை எப்படி தெரிந்தது என்றால், நான் ஒரு ரீமிக்ஸ் ஆல்பம் பன்னி இருந்தேன். டயானாவை வெல்கம் பண்ணி அவங்க இறந்ததற்குப் பிறகு போய் வா இளவரசி என்றெல்லாம் ஒரு பாட்டு பாடி இருந்தேன். அது வந்து லண்டனில் கடைத்தெரு, எல்லா கடைகள், விதிகள் எல்லாம் பேனர் போஸ்டர் போட்டு வைத்திருந்தார்கள்.
வீடியோவில் 6 : 30 நிமிடத்தில் பார்க்கவும்
கருணாஸின் சினிமா அனுபவம்:
அந்த போஸ்டரை பார்த்து தான் பாலா அண்ணா என்னை படத்தில் நடிக்க கூப்பிட்டிருந்தார். அப்படி தான் லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் கிடைத்தது. அன்னைக்கும் இன்னைக்கும் சரி, சினிமா பொறுத்த வரைக்கும் நம்மை வேண்டும் என நினைத்தால் எங்கிருந்தாலும் கொக்கி போட்டு விடுவார்கள். நாம் வேண்டாம் என நினைத்து விட்டால் நம் பக்கத்தில் இருந்தால் கூட வேற ஒருத்தரை தான் கூப்பிடுவார்கள் என்று கூறியிருந்தார். இப்படி கருணாஸ் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.