கென் கருணாஸ் ஹீரோவாக நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் கருணாஸ். இவர் தமிழ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ’நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இந்த ஒரு படத்திலேயே இவர் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார்.
பின்னர் கருணாஸ் அவர்கள் பல படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து தனெக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார். பின் இவர் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார். இறுதியாக 2013 ஒரு ஆண்டு வெளிவந்த ரகளபுரம் படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் ஹீரோவாக நடிக்கவில்லை. தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கென் கருணாஸ் திரைப்பயணம்:
இதற்கிடையே கருணாஸ் அவர்கள் பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளார்கள். மகன் பெயர் தான் கென். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான அழகு குட்டி செல்லம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது தனுஷ் அவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் தான். இந்த படத்தில் கருணாஸின் மகன் கென் நடிப்பை பார்த்து பல பேர் பாராட்டினார்கள்.
விடுதலை 2:
இதை அடுத்து கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருந்த விடுதலை 2 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கென் நடித்திருந்தார். இருந்தாலுமே இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டிருந்தது. தற்போது இவர் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கென் கருணாஸ் ஹீரோவாக நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கென் ஹீரோவாக நடிக்க இருக்கும் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தான் தயாரிக்க இருக்கிறாராம்.
கென் ஹீரோவாக நடிக்கும் படம்:
இந்த படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருந்த ஒருவர் தான் இயக்க இருக்கிறார். இது ஒரு ரீமேக் படம் என்றும் கூறப்படுகிறது. மலையாளத்தில் வெளிவந்த ஆலப்புழா ஜிம்கானா என்ற படத்தின் உடைய தமிழ் ரீமேக்கில் தான் ஹீரோவாக கென் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினுடைய உரிமையை வாங்குவதற்கான பணியில் வெற்றிமாறன் ஈடுபட்டு வருகிறார். கூடிய விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிமாறன் குறித்த தகவல்:
தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் மனுஷி என்ற படம் உருவாகி வருகிறது. இதில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இது தவிர கவின் நடிக்கும் படத்தையும் வெற்றிமாறன் தான் தயாரித்து வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.