திராவிட முரண்பட்டால் ‘தமிழா தமிழா’ வில் இருந்து வெளிறிய கரு.பழனியப்பன் – அவரை வைத்தே அதே போல நிகழ்ச்சியை துவங்கிய பிரபல சேனல்.

0
4113
karupalani
- Advertisement -

தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் விலகிய நிலையில் தற்போது அதே போல வேறு ஒரு நிகழ்ச்சி துவங்கி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கரு.பழனியப்பன். பார்த்திபன் கனவு என்ற படத்தின் மூலம் இவர் முதன் முதலாக இயக்குனரானார். அதனைத் தொடர்ந்து சில படங்களை இயக்கி இருக்கிறார். சமீப காலமாக இவர் படங்களை இயக்குவதில்லை ஆனால், தமிழா தமிழா மூலம் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமானார். நீயா நானா நிகழ்ச்சிக்கு பின்னரே இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதனால் அடிக்கடி நீயா நானா நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டு இந்த நிகழ்ச்சியை கலாய்த்தும் வந்தனர்.

-விளம்பரம்-

கரு பழனியப்பனின் தமிழா தமிழா நிகழ்ச்சி கேலிக்கு உள்ளான முக்கிய காரணமே நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் பெரும்பாலும் யாரையும் உரிமையில் பேசுவது கிடையாது. அதேபோல விவாதங்களில் பெரும்பாலும் மக்கள் நினைக்கும் கருத்துக்களையே கோபிநாத் முன்வைத்து வந்தனர். இந்த நிலையில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து இருந்தார்.

- Advertisement -

கடந்த மார்ச் மாதம் தான் கரு பழனியப்பன் தனது பிறந்தநாளை கொண்டாடினர். தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள் !!! இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க , வழிகாட்டி இருக்கிறது.

தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட ” தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது…!சமூக நீதி , சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! …..நன்றி ஜீ தமிழ், சிஜு பிரபாகரன், பூங்குன்றன் உடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் அன்பு! நன்றி ! முத்தங்கள் !எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் , விரைவில் சந்திப்போம்!! என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இதுகுறித்து பேட்டி அளித்த அவர் ‘நான் அந்தத் தொடரை ஆரம்பித்து நான்கு வருடம் ஆகிவிட்டது. முடிவை எப்போதும் நாம் தான் எடுக்க வேண்டும். இதே தன்மை கொண்ட நிகழ்ச்சி வேறொரு தளத்தில் கொண்டு வர தீவிரமான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழில் கொடுத்த ஆதரவிற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். கொஞ்சமும் மாற்று குறையாமல் அடுத்த முயற்சி இருக்கும். ஒரு பெரும் வாசற்படியை கொண்டு வந்து சேர்த்த விதத்தில் இந்த நிகழ்ச்சிக்கு நான் என்னை அர்ப்பணித்து வாழ்கிறேன் என்பதும் உண்மை.

நிறுவனத்தின் மீது பெரிதும் புகார் இல்லை. அடுத்த வாரம் இன்னும் பெரிய தளத்தில் சுதந்திரமாக கருத்துக்களை முன் வைக்க வாய்ப்புவதற்கான அறிவிப்பு காத்திருக்கிறது. அடர்ந்த பொருட்களில் அதில் விவாதங்களை பேசிக்கொள்ளலாம். அதே முழுமையோடு புது நிகழ்ச்சியிலும் என்னை முன்வைப்பேன் என உறுதியளிக்கிறேன்’ என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கலைஞர் தொலைக்காட்சில் ‘தமிழா தமிழா’ என்ற புதிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 11 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

Advertisement