கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யணும், கொதித்து எழுந்த பெண்கள்- பின்னணி இது தான்

0
181
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் தான் முதலில் ஒளிபரப்பட்டது. அதனை அடுத்து இந்த நிகழ்ச்சியை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுவரை 7 சீசன்களை கடந்து தற்போது 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி நான்கு வாரம் முடிந்து 30 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

மேலும், நிகழ்ச்சியை சுவராசியமாக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 6 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள். அதில் மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ராயன், நடிகரும் மாடலும் ஆன ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சுஜா வருணியின் கணவர் சிவக்குமார் ஆவார். இப்படி நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று வைத்து இருக்கும் கோரிக்கை தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சிக்கு தடை செய்ய வேண்டும்:

தூத்துக்குடி மாவட்டம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் , இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராகவும், கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையிலும் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை மத்தியில, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

கோட்டாட்சியர் மகாலட்சுமி பேட்டி:

இது தொடர்பாக கோட்டாட்சியர் மகாலட்சுமி அளித்த பேட்டியில், வெள்ளி திரை போல இந்த சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும் சென்சார் போர்டு கொண்டு வர வேண்டும். இந்த நிகழ்ச்சியை குடும்பத்துடன் உட்கார்ந்து யாருமே பார்க்க முடியாது. கலை நிகழ்ச்சியாக குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. ஆணும் பெண்ணும் ஒரே அறைக்குள் உட்கார வைத்து அங்கு நடக்கும் அந்தரங்க விஷயத்தை வீடியோவாக சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். ஆடை கலாச்சாரம் என்ற பெயரில் சின்ன சின்ன டவுசர், உள்ளாடைகளை முக்கியமான ஆடைகளாக கருதி ரொம்ப மோசமாக ஆடைகளை அணிந்து இருக்கிறார்கள். தமிழ்நாடு கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை கொண்டு வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

Advertisement