ஸ்ரீ ரெட்டி பாலியல் குற்றச்சாட்டு உண்மை..! ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை.!

0
521
Sri-Reddy

சில மாதங்களுக்கு முன்னர் தன்னை படுக்கைக்கு அழைத்த தெலுங்கு சினிமா பிரபலங்களில் பெயர்களை வெளியிட்டு வந்த நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். ‘தமிழ் லீக்ஸ்’ என்ற பெயரில் தமிழ் திரையுலக பிரபலங்களை பற்றிய சர்ச்சையான விடயங்ககளை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

sri reddy

ஆனால், இவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும், இது பின்புலம் இல்லாத குற்றச்சாட்டு என்றும் பலரும் கூறி வருகின்றனர். அதே போல ‘தான் இதை எதையும் விளம்பரத்திற்காக செய்யவில்லை, யாராவது ஒருவர் இந்த விடயங்களை வெளியில் கொண்டு வர வேண்டும், அதனால் தான் இதை செய்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

அதே போல சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் சினிமா பிரபலங்கள் மீது வைத்தவரும் குற்றச்சாட்டிற்கு நடிகரும், இயக்குருமான டி ராஜேந்தர் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசி இருந்தார். இந்நிலையில் நடிகை கஸ்தூரியும், ஸ்ரீரெட்டி கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டியின் பேட்டிகளை பார்த்துள்ள நடிகை கஸ்தூரி,”சினிமா ஆசை காட்டி தங்கள் ஈனபுத்திக்கு பெண்களை இரையாக்கிக்கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கபோட்டுக்கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார். இவர் கூடவா என்று சிலர் பெயரை கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது, ஆனால் அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன” என்று தனது முக நூல் பக்கத்தில் சுமார் ஒரு நீளமான கருத்தினை பதிவிட்டுள்ளார்.